search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபிகாகுமாரி
    X
    தீபிகாகுமாரி

    டோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தை போட்டி கால் இறுதியில் தீபிகாகுமாரி தோல்வி

    டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரியின் செயல்பாடும் மோசமாக இருந்தது.

    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதன் வில்வித்தை பந்தயத்தில் இந்தியா சார்பில் அதானு தாஸ் , பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகிய 3 வீரர்கள், ஒரே ஒரு வீராங்கனையான தீபிகா குமாரி ஆகிய நான்கு பேர் பங்கேற்றனர்.

    இதன் ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்தது. தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவும், தருண் தீப் ராயும் தோல்வி அடைந்தனர். இருவரும் முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றில் தோற்று வாய்ப்பை இழந்தனர்.

    கணவன்-மனைவியான அதானு தாசும் , தீபிகா குமாரியும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    தீபிகா குமாரி இன்று காலை நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செனியா பெரோவாவை (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    முதல் செட்டை தீபிகா 28-25 என்ற கணக்கில் கைப்பற்றினார். செட்டை (3 முறை அம்பு எறிய வேண்டும்) வெல்பவர் 2 புள்ளி பெறுவார். சமநிலையில் முடிந்தால் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அதன்படி அவர் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றார். 2-வது செட்டை பெரோவா 27-26 என்ற கணக்கில் வென்றார். இதனால் 2-2 என்ற சம நிலை ஏற்பட்டது.

    3-வது செட்டை தீபிகா குமாரி 28-27 என்ற கணக்கில் வென்றதால் 4-2 என்ற முன்னிலையை பெற்றார். 4-வது செட்டில் சமநிலை ( 26-26 ) ஏற்பட்டது. இதனால் அவர் 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

    6-வது மற்றும் கடைசி செட்டை செனியா பெரோவா 28-25 என்ற கணக்கில் வென்றார். இதனால் 5-5 என்ற சம நிலை ஏற்பட்டு உருவாகி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    எனவே ஆட்டத்தை நிர்ணயிக்க “சூட்-அவுட்” கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது இருவருக்கும் ஒரே ஒருமுறை அம்பு எறியும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பெரோவா இதில் 7 பாயிண்ட் பெற்றார். தீபிகா குமாரி மிகவும் சிறப்பாக செயல்பட்டு 10 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றார். ஸ்கோர்: 28-25, 26-27, 28-27, 26-26, 25-28, 10-7.இந்தப் போட்டியில் அவர் 4 தடவை 10 பாயிண்டுகளை பெற்று சாதித்தார்.

    தீபிகா குமாரி கால் இறுதியில் தென் கொரியாவை சேர்ந்த ஆன்சானை சந்தித்தார். ஆன்சானின் குறிபார்த்து அம்பு எறிதலுக்கு முன்பு தீபிகா குமாரியால் சமாளிக்க முடியவில்லை. அவர் 3 செட்டையும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அதே நேரத்தில் தீபிகா குமாரியின் செயல்பாடும் கால் இறுதியில் மோசமாக இருந்தது.

    முதல் செட்டை 27-30 என்ற கணக்கிலும், 2-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் அவர் இழந்தார். ஆன்சான் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×