என் மலர்
விளையாட்டு
வாழ்வா? சாவா? என்ற போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி, இன்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்புக்காக காத்திருக்கிறது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளன.
நெதர்லாந்துக்கு எதிராக 1-5, ஜெர்மனிக்கு எதிராக 0-2, கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 1-4 என வரிசையாக படுதோல்வியடைந்தது. 4-வது லீக்கில் அயர்லாந்தை 1-0 என வீழ்த்தி காலிறுதி வாய்ப்புக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா முதல் கோல் அடித்தார். முதல் கால் பகுதியின் ஆட்ட முடிவின் கடைசி நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா பதில் கோல் அடித்தது. இதனால் முதல் கால் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.

2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீராங்கனை கட்டாரியா 17-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் நேரத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஹன்டர் கோல் அடித்தார். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் 2-2 என சமநிலை பெற்றன.
3-வது காலிறுதி நேரத்தில் இந்தியா 32-வது நிமிடத்திலும் (நேஹா), தென்ஆப்பிரிக்கா 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தன. 4-வது கால்பகுதி ஆட்டத்தில் இந்தியாவின் கட்டாரியா 49-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளால் அதற்கு பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பெண்கள் அணி 4-3 என வெற்றி பெற்றது.
அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், ஜப்பான் 2-வது இடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நிலவரப்படி சீனா 19 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா (44) முதல் இடமும், சீனா (41) 2-வது இடத்திலும், ரஷ்யா (34) 3-வது இடத்திலும், ஜப்பான் (28) 4-வது இடத்திலும், 26 எண்ணிக்கையுடன் ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஆண்கள் 100மீ பட்டர்ஃப்ளை, பெண்கள் 800மீ ஃப்ரீஸ்டை நீச்சல் போட்டியில் அமெரிக்கா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இன்று நான்கு போட்டிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான 100மீ பட்டர்ஃப்ளை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் டிரெஸ்சல் தங்கப்பதக்கம் வென்றார். ஹங்கேரியின் மிலாக் வெள்ளிப்பதக்கமும், சுவிட்சர்லாந்தின் போன்ட்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 200மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மெக்கியோன் தங்கப்பதக்கம் வென்றார். கனடாவின் கைல் மாஸ்சே வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரேலியாவின் சீபோம் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 800மீ ஃப்ரீஸ்டைல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் லெடெக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டிட்மஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தாலியின் குயடெரெல்லா வெண்கப்பதக்கம் வென்றார்.
மிக்ஸ்டு 4x100மீ மிட் ரிலே பிரிவில் கிரேட் பிரிட்டன் தங்கப்பதக்கம், சீனா வெள்ளிப்பதக்கம், ஆஸ்திரேலியா வெண்கல பதக்கம் வென்றது.
காலிறுதியில் தீபிகா குமாரியை தோற்கடித்த தென்கொரிய வீராங்கனை ஷான் அன் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியவர் தென் கொரியாவின் ஷான் அன். எந்தவித பதற்றமின்றி ஷான் அன் அம்புகளை எய்தினார். இதனால் தொடர்ந்து மூன்று ஷெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இவ்வளவு துல்லியமாக விளையாடுகிறாரே என இந்திய ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்த நிலையில், வில்வித்தையில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளா் ஷான் அன்.
கடந்த 24-ந்தேதி நடைபெற்ற கலப்பு அணி பிரிவில் நெதர்லாந்து அணிக்கெதிராக ஜி டியோக் கிம் உடன் இணைந்து வெற்றி பெற்றார்.
25-ம் தேதி நடைபெற்ற பெண்கள் அணியில் ஜாங், காங் உடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

கொலம்பியா வீரருக்கு எதிராக மூன்று சுற்றுகளிலும் ஒரு நடுவரிடம் இருந்தே அமித் பங்கலுக்கு சாதகமாக புள்ளிகள் கிடைத்தது.
ஆண்களுக்கான குத்துச்சண்டை ஃப்ளை (45-52 கிலோ) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் அமித் பங்கல் கொலம்பியாவின் யுபெர்ஜென் ஹெர்னி மார்ட்டினெஸ் ரிவாஸை எதிர்கொண்டார்.
மூன்று ரவுண்டுகள் முடிவில் 29-28, 27-29, 27-30, 28-29, 28-29 (1:4) என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். ஐந்து நடுவர்கள் மூன்று சுற்றுகளில் மதிப்பெண் வழங்குவார்கள். அதில் ஒருமுறை மட்டுமே அமித் பங்கல் சாதகமான புள்ளிகள் கிடைத்தன.

தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 12 வீராங்கனைகளில் ஒருவராக இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் சிறப்பாக செயல்பட்டார். அவர் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து 2-வது இடம் பிடித்து அசத்தினார்.
66 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தால் தானாகவே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இவர் 64 மீட்டர் தூரம் எறிந்து முதல் 12 இடங்களுக்குள் நுழைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை பெற்றுள்ளார். மற்றொரு வீராங்கனை சீமா புனியா 60.57 மீட்டர் தூரம் வரை எறிந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அடானு தாஸ் ஏமாற்றம் அளித்தார்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அடானு தாஸ், ஜப்பான் வீரர் டகாஹாரு பருகவா ஆகியோர் மோதினர்.
இதில் அடானு தாஸ் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் இழந்தார். இதன்மூலம் பருகவா டகாஹாரு 6-4 என்ற கணக்கில் அடானு தாசை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பென் ஸ்டோக்சுக்கு பதிலாக கிரேக் ஓவர்டான் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார்.
விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் அவர் எல்லாவகையான கிரிக்கெட்டில் இருந்தும் கொஞ்ச காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த், விவேக் ஜோடி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹரி 52 ரன்னும், விவேக் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மொகித் ஹரிஹரன 32 ரன்னும் எடுத்தார்.
சேலம் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், சேலம் அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முருகன் அஷ்வின் மட்டும் கடைசி வரை தாக்குப்பிடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. திண்டுக்கல் பெற்ற 3வது வெற்றி இதுவாகும். ஆட்ட நாயகன் விருது விவேக்கிற்கு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் அணியின் விவேக் 59 ரன்களும், ஹரி நிஷாந்த் 52 ரன்களும் எடுத்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்த திண்டுக்கல் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்களை குவித்தது.
திண்டுக்கல் அணியின் வீரர் விவேக் அதிக பட்சமாக 59 ரன்களை குவித்தார். கேப்டனாக இருக்கும் ஹரி நிஷாந்த் 52 ரன்களை எடுத்தார். சேலம் அணி வீரர் லோகேஷ் ராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 186 ரன்கள் இலக்குடன் களத்தில் இறங்க இருக்கிறார்கள்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இன்று 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. ஒரு தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் அணி வீரர்கள்:-
1.ஹரி நிஷாந்த் 2.அருண் 3.மணிபாரதி 4.விவேக் 5. விக்னேஷ் 6.சுவாமி நாதன் 7.சிலம்பரசன் 8. சிங் 9.ஹரிஹரன் 10. ஸ்ரீனிவாசன் 11. சுதேஷ்
சேலம் அணி வீரர்கள்:-
1.விஜய் சங்கர் 2. அஸ்வின் 3. அபிஷேக் 4. சுசில் 5. லோகேஷ் 6. கணேஷ் மூர்த்தி 7.கார்த்திகேயன் 8. சுகாஷ் 9.பெரியசாமி 10. சுந்தர் 11. டேரில் ஃபெராரியோ
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி லீக் சுற்று போட்டியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக் சுற்றின் 27-வது போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார்.
இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 19-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டனகா கோல் அடித்து தனது நாட்டு அணிக்கு கோல் கணக்கை தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் 3-வது கால் பகுதியில் 33-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி ஒரு கோல் அடித்தார். இதனால், ஜப்பான் அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இரு அணிகளும் தலா இரண்டு
கோல்கள் என சமநிலையில் இருந்தன. இதனால், ஆட்டம் சூடுபிடித்தது. இதனை தொடர்ந்து இந்திய ஆண்கள் அணியினர் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர்.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஷம்ஷர் சிங்கும், 51-வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மாவும் தலா 1 கோல் அடித்தனர். பெனால்டி கார்னர் முறை மூலம் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால், இந்திய அணியில் கோல் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் முராடா ஒரு கோல் அடித்தார். இதனால், அந்த அணியின் கோல் எண்ணிக்கை
3 ஆக அதிகரித்தது. இறுதியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.