search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரை சதமடித்த ஹரி நிஷாந்த்
    X
    அரை சதமடித்த ஹரி நிஷாந்த்

    ஹரி நிஷாந்த், விவேக் அபாரம் - 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த், விவேக் ஜோடி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹரி 52 ரன்னும், விவேக் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    மொகித் ஹரிஹரன 32 ரன்னும் எடுத்தார்.

    சேலம் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    போராடிய முருகன் அஷ்வின்

    இறுதியில், சேலம் அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முருகன் அஷ்வின் மட்டும் கடைசி வரை தாக்குப்பிடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.  திண்டுக்கல் பெற்ற 3வது வெற்றி இதுவாகும். ஆட்ட நாயகன் விருது விவேக்கிற்கு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×