என் மலர்
செய்திகள்

டிரெஸ்சல்
நீச்சல்: இன்று நடைபெற்ற 4 பதக்க போட்டியில் 2-ல் தங்கம் வென்றது அமெரிக்கா
ஆண்கள் 100மீ பட்டர்ஃப்ளை, பெண்கள் 800மீ ஃப்ரீஸ்டை நீச்சல் போட்டியில் அமெரிக்கா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இன்று நான்கு போட்டிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான 100மீ பட்டர்ஃப்ளை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் டிரெஸ்சல் தங்கப்பதக்கம் வென்றார். ஹங்கேரியின் மிலாக் வெள்ளிப்பதக்கமும், சுவிட்சர்லாந்தின் போன்ட்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 200மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மெக்கியோன் தங்கப்பதக்கம் வென்றார். கனடாவின் கைல் மாஸ்சே வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரேலியாவின் சீபோம் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 800மீ ஃப்ரீஸ்டைல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் லெடெக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டிட்மஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தாலியின் குயடெரெல்லா வெண்கப்பதக்கம் வென்றார்.
மிக்ஸ்டு 4x100மீ மிட் ரிலே பிரிவில் கிரேட் பிரிட்டன் தங்கப்பதக்கம், சீனா வெள்ளிப்பதக்கம், ஆஸ்திரேலியா வெண்கல பதக்கம் வென்றது.
Next Story






