என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மதுரைக்கு எதிராக நெல்லை அணி வீரர் அதிசயராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.


    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும்  மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த  மதுரை பாந்தர்ஸ் அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    மதுரைக்கு எதிராக நெல்லை அணி வீரர் அதிசயராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
    காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.
    டோக்கியோ:

    ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.
    ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஒலிம்பிக் தொடர்பானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

    என்றாலும், கொரோனா  ஒலிம்பிக் கிராமத்தில் அடியெடுத்து வைத்து வீரர்களை தாக்கி வருகின்றன. இன்று புதிதாக ஒலிம்பிக் தொடர்பான 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் யாரும் வீரர்கள் கிடையாது. 21 பேரில் 16 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

    ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஜப்பான் முழுவதும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டோக்கியோவில் 3 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நேற்று மூன்று ஒலிம்பிக் வீரர்கள் உட்பட 27 பேர் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். அவர்களில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் வால்டர் சாம் கெண்ட்ரிக்ஸும் அடங்குவார்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக தினேஷ் 39 ரன்கள் விளாசினார். கோவை அணி தரப்பில் அபிலேஷ், முகிலேஷ், திவாகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. கங்கா ஸ்ரீதர் 30, வெங்கட்ரமணன் 24, சாய் சுதர்சன் 51 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திருப்பூர் அணியின் கேப்டன் முகமது சிறப்பாக பந்து வீசி 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கத்தையும் தட்டிச் சென்றார்.
    பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையம் இறுதிச்சுற்று இன்று மாலை நடைபெற்றது. இதில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள், ஐவரி கோஸ்ட் வீராங்கனை, சுவிட்சர்லாந்தின் இரண்டு வீராங்கனைகள், அமெரிக்க வீராங்கனை, பிரிட்டன் வீராங்கனை என 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    விசில் ஊதியதும் எட்டு வீராங்கனைளும் சிட்டாக பறந்தனர். ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 10.61 வினாடிகளில் கடந்தது ஒலிம்பிக் சாதனையாகும். இதற்கு 10.62 வினாடிகளில் அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் பந்தைய தூரத்தை கடந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.

    ஜமைக்கா வீராங்கனைகள்

    மற்றொரு ஜமைக்கா வீராங்கனை ஷெலி-அன் ஃப்ராசன்-பிரைஸ் 10.74 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு ஜமைக்கா வீராங்கனை ஷெரிக்கா ஜேக்சன் 10.76 வினாடிகளில் கடந்த வெண்கலப்பதக்கம் வென்றார்.
    2-வது முயற்சியில் 68.90 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்தது மிகச்சிறந்த எறிதலாக இருக்க சுவீடன் வீரர் டேனியல் தங்கப்பதக்கம் வென்றார்.
    ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று மாலை நடைபெற்றது. இதில் 12 வீரர்கள் கலந்து கொண்டனர்.  ஒவ்வொரு வீரரும் 6 முறை வட்டை எறிய வேண்டும். இதில் எது அதிக தூரத்திற்கு செல்கிறதோ, அது அவரின் சிறந்த வீச்சாக எடுத்துக்  கொள்ளப்படும்.

    சுவீடன் வீரர் டேனியல் 2-வது முறையாக எறிந்தபோது, 68.90 மீட்டருக்கு எறிந்தார். இதுவே சிறந்த எறிதலாக இருந்தது. இதனால் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு சுவீடன் வீரர் சைமன் 67.39 மீட்டர் தூரத்திற்கு எறிந்த வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆஸ்திரியா வீரர் லூகாஸ் 67.07 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    சீன வீராங்கனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐந்து நடுவர்களின் புள்ளிகளையும் இழந்து பரிதாபமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
    குத்துச்சண்டையில் பெண்களுக்கான மிடில் வெயிட் (69-75 கிமீ) பிரிவில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் கியன் லீயை எதிர்கொண்டார். 

    சீன வீராங்கனையின் தாக்குலுக்கு இந்திய வீராங்கனை பூஜா ராணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மூன்று சுற்றுகளிலும் ஐந்து நடுவர்களிடம் இருந்து ஒருமுறை கூட அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.

    இதனால் 27-30, 26-30, 27-30, 27-30, 27-30 என 0:5 என்ற கணக்கில் தோல்வியடைந்த வெளியேறினார்.
    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பி.வி. சிந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றினார்.
    டோக்கியோ :

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து (6) சீன தைஃபேயின் தை சூ-யிங்கை (2) எதிர்கொண்டார்

    இந்த போட்டியின் முதல் செட்டில் பி.வி. சிந்து ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்திய காரணமாக 18-21 என்ற கணக்கில் முதல் செட்டில் தோல்வி அடைந்தார்.

    2 செட்டில் தொடக்கத்தில் இருந்தே தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்தினார். இடைவேளையின் போது 11-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பின் பி.வி. சிந்துவால் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற முடியவில்லை. இதனால் 2-வது செட்டையும் சீன தைஃபே வீராங்கனை தை சூ-யிங் 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி பி.வி. சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இப்போட்டியில் தோல்வி அடைந்த பி.வி. சிந்து, மற்றோரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹிபிங்கை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் எதிர் கொள்கிறார். இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. 
    டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை ஜோகோவிச் போராடி இழந்தார்.
    டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பேப்லோ கரீரியோ பஸ்டா இடையே நடைபெற்றது. போட்டியின் முதல் செட்டை கரீரியோ 6-4 என கைப்பற்றினார். 

    டை-பிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். இதனால் போட்டி 1-1 என சமநிலைப் பெற்றது.

    கரீரியோ

    3-வது செட்டிலும் ஸ்பெயின் வீரர்  பேப்லோ கரீரியோ பஸ்டா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பேப்லோ கரீரியோ பஸ்டா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். சர்வீஸ் செய்த பேப்லோ கரீரியோ பஸ்டா, 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

    தங்கம் வென்று சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் வெண்கல பதக்கம் கூட பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:


    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 76 ரன் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். சேலம் 2-வது தோல்வியை தழுவியது.

    13-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை கிங்ஸ் 5 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. திருப்பூர் அணி 3 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி 2 இடங்களில் உள்ளன. 2-வது வெற்றிக்காக மதுரை, நெல்லை அணிகள் கடுமை யாக போராடும்.

    ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள துப்பாக்கிச்சுடுதல் டிராப் கலப்பு அணி போட்டியில் ஸ்பெயின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
    ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் டிராப் கலப்பு அணி (Trap Mixed Team) பிரிவு, தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - சான் மெரினோ அணிகள் மோதின.

    இதில் ஸ்பெயின் 41-40 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஸ்பெயின் சாதனைப்படைத்துள்ளது. தோல்வியடைந்த சான் மெரினோ வெள்ளிப்பதக்கமும், அமெரிக்கா வெண்கல பதக்கமும் வென்றன.
    அன்ஜூம் மவுத்கில் 1167-54X, தேஜஸ்வினி சவந்த் 1154-50X புள்ளிகளும் பெற்று முறையே 15 மற்றும் 33-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தனர்.
    பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதலில் 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டியின் தகுதிப்பிரிவு இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    நீலிங் (Kneeling), ப்ரோன் (Prone), ஸே்டேண்டிங் (Standing) ஆகிய மூன்று முறைகளில் சுடுதல் வேண்டும். மவுத்கில் நீலிங் முறையில் 99, 98, 96, 97 (390), ப்ரோன் முறையில் 98, 100, 98, 99 (395), ஸ்டேண்டிங் 94, 96, 95, 97 (382) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1167-54x புள்ளிகளுடன் 15-வது இடம் பிடித்தார்.

    தேஜஸ்வினி சவந்த்

    தேஜஸ்வினி சவந்த் நீலிங் முறையில் 97, 92, 98, 97 (384), ப்ரோன் முறையில் 99, 98, 99, 98 (394), ஸ்டேண்டிங் 94, 93, 95, 94 (376) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1154-50X புள்ளிகளுடன் 33-வது இடம் பிடித்தார்.

    இப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
    ×