என் மலர்
செய்திகள்

பதக்கம் வென்றவர்கள்
டிராப் கலப்பு அணி துப்பாக்கிச்சுடுதல்: ஸ்பெயின் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை
ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள துப்பாக்கிச்சுடுதல் டிராப் கலப்பு அணி போட்டியில் ஸ்பெயின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் டிராப் கலப்பு அணி (Trap Mixed Team) பிரிவு, தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - சான் மெரினோ அணிகள் மோதின.
இதில் ஸ்பெயின் 41-40 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஸ்பெயின் சாதனைப்படைத்துள்ளது. தோல்வியடைந்த சான் மெரினோ வெள்ளிப்பதக்கமும், அமெரிக்கா வெண்கல பதக்கமும் வென்றன.
Next Story






