என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டிஎன்பிஎல்: 3-வது வெற்றி ஆர்வத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் அணியுடன் இன்று மோதல்

    டிஎன்பிஎல் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி மோத உள்ளது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் ஹரி நிஷாந்த், அருண், மணிபாரதி, விவேக், விக்னேஷ், சுவாமி நாதன், சிலம்பரசன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அந்த அணி 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.

    அந்த அணியில் அபிஷேக், கோபிநாத், விஜய்சங்கர், முருகன் அஸ்வின், ஜி.பெரியசாமி போன்ற வீரர்கள் உள்ளனர்.

    நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தினேஷ் 26 ரன் எடுத்தார். திருச்சி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவணகுமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய திருச்சி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்ய கணேஷ் 43 ரன்னும் எடுத்தனர். திருச்சி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.திருப்பூர் அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

    Next Story
    ×