என் மலர்
செய்திகள்

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஆக்கி: வாழ்வா, சாவா? ஆட்டத்தில் இந்தியா வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடமும், 2-வது போட்டியில் 0-2 என்ற கணக்கில் ஜெர்மனியிடமும், 3-வது ஆட்டத்தில்1-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்றது.
இந்திய மகளிர் ஆக்கி அணி 4-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இன்று எதிர் கொண்டது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் நவ்நீத் கவுர் கோல் அடித்தார்.
இந்த பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி 12 புள்ளிகள் பெற்று கால்இறுதிக்கு முன்னேறிவிட்டன. இங்கிலாந்து 6 புள்ளிகளுடனும், அயர்லாந்து, இந்தியா தலா 3 புள்ளிகளுடனும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 4 போட்டிகளிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. இதில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெற முடியும்.
Next Story






