search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி-திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் திருச்சி அணியும் திருப்பூர் அணியும் மோதுகின்றனர்.

    சென்னை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய சேலம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னை எடுக்க முடிந்தது. கேப்டன் டேரில் பெராரியோ அதிகபட்சமாக 22 பந்தில் 39 ரன் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சோனுயாதவ் 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 40 பந்தில் 52 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சசிதேவ் 30 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அடுத்து நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. அதே நேரத்தில் சேலம் அணி முதல் தோல்வியை தழுவியது.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 


    Next Story
    ×