search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 விக்கெட் கைப்பற்றிய ஹசரங்காவை பாராட்டும் சக வீரர்கள்
    X
    4 விக்கெட் கைப்பற்றிய ஹசரங்காவை பாராட்டும் சக வீரர்கள்

    மூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை

    டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்கத்தில் இருந்தே இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துவக்கத்தில் இருந்தே இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர் ஷிகர் தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 36 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    ஷிகர் தவான் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் சமீரா

    கடும் நெருக்கடிக்கு மத்தியில் சற்று தாக்குப்பிடித்து ஆடிய குல்தீப் யாதவ் 23 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இலங்கை தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தசுன் ஷனகா 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமாக திரும்பும்.

    Next Story
    ×