என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன வீராங்கனைகள்
    X
    சீன வீராங்கனைகள்

    டைவிங்: பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனாவுக்கு தங்கம்

    ஒலிம்பிக் பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் டைவிங் இறுதி சுற்றில் அமெரிக்கா வெள்ளி, மெக்சிகோ வெண்கல பதக்கம் வென்றன.
    ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில், கலந்து கொண்ட பல்வேறு நாடுகளும் அற்புதமாக விளையாடி அசத்தி வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான  டைவிங் போட்டியில் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவு இறுதி சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டது. இரண்டு பேர் இணைந்து பங்கெடுத்த இந்த போட்டியில் மொத்தம்  6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் சீன ஜோடி 363.78 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து  தங்கப்பதக்கத்தை வென்றது.

    310.80 புள்ளிகள் கணக்கில் அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது. 299.70 புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றது.
    Next Story
    ×