search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆண்கள் கலப்பு டைவிங் போட்டியில் பிரிட்டன் தங்க பதக்கம்

    டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் கலப்பு டைவிங் போட்டியில் பிரிட்டன் தங்க பதக்கத்தை வென்றது.
    டோக்கியோ:

    ஒலிம்பிக் போட்டி கடந்த நாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.  இதில், கலந்து கொண்ட பல்வேறு நாடுகளும் அற்புதமாக விளையாடி அசத்தி வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைப்பெற்று கலப்பு ஆண்கள் டைவிங் போட்டியில் இறுதி சுற்றில் 8 அணி கலந்து கொண்டது. மொத்தம் நடைப்பெற்ற 6 சுற்றில் பிரிட்டன் நாட்டை  சேர்ந்த டாலே தாமஸ்  மற்றும் லீ மடே 471.81 புள்ளிகள் கணக்கில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். 470.58 புள்ளிகள் கணக்கில் சீனா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றனர். 439.92 புள்ளிகள் கணக்கில் ரசியன் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றது.
    Next Story
    ×