என் மலர்
விளையாட்டு
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றனர்.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சையும் வீழ்த்தின.
டி.என்.பி.எல். போட்டியின் 10-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சியிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
திருப்பூர் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் சேலத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

சீன வீரருக்கு எதிரான ஐந்து சுற்றுகளில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியாமல், இந்திய வீரர் ஆஷிஷ் குமார் முதல் சுற்றோடு வெளியேறினார்.
குத்துச்சண்டையில் ஆண்களுக்கான (69-75 கிலோ) மிடில் வெயிட் பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் சீனாவைச் சேர்ந்த எர்பிக் டுஹெட்டாவை எதிர்கொண்டார்.
இதில் ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை பிரிவில் ஜப்பான் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
டோக்கியோ:
ஆண்கள் வில்வித்தை போட்டியில் கொரியா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஒலிம்பிக்கில் ஆண்கள் வில்வித்தை இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இப்போட்டியில், கொரியா அணி முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றது. இரண்டாவது இடத்தை பிடித்து சீனா வெள்ளி வென்றது. மூன்றாவது இடத்தை பிடித்து ஜப்பான் வெண்கலம் வென்றது.

முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா, 3-வது சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தார்.
டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையுடன், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுகிறார் மணிகா பத்ரா.
டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஆஸ்திரியாவின் சோபியா பொல்கானோவாவை எதிர்கொண்டார். முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா, இந்த சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதனால் 8-11, 2-11, 5-11, 7-11 என தொடர்ந்து நான்கு கேம்களை இழந்து தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் கலப்பு டைவிங் போட்டியில் பிரிட்டன் தங்க பதக்கத்தை வென்றது.
டோக்கியோ:
ஒலிம்பிக் போட்டி கடந்த நாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இதில், கலந்து கொண்ட பல்வேறு நாடுகளும் அற்புதமாக விளையாடி அசத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று நடைப்பெற்று கலப்பு ஆண்கள் டைவிங் போட்டியில் இறுதி சுற்றில் 8 அணி கலந்து கொண்டது. மொத்தம் நடைப்பெற்ற 6 சுற்றில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த டாலே தாமஸ் மற்றும் லீ மடே 471.81 புள்ளிகள் கணக்கில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். 470.58 புள்ளிகள் கணக்கில் சீனா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றனர். 439.92 புள்ளிகள் கணக்கில் ரசியன் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றது.

ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவு போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் அதானுதாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய், தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.
கலப்பு அணிகள் பிரிவில் பிரவின் ஜாதவ்- தீபிகா குமாரி ஜோடி காலிறுதியில் தென் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோற்றிருந்தது.
ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவு போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. தென்கொரிய வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 54-59, இரண்டாவது செட்டை 57-59, மூன்றாவது செட்டை 54-56 என இழந்து செட் பாயிண்டில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி ஜோடி இன்றைய போட்டியில், நம்பர் ஒன் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.
பேட்மிண்டன் இரட்டையர் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் இரட்டையருக்கான ‘ஏ’ பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நம்பர் ஒன் ஜோடியான இந்தோனேசியாவின் ஜிடியோன்- சுகமுல்ஜோ ஜோடியை எதிர்கொண்டது.
நம்பர் ஒன் ஜோடிக்கு எதிராக இந்திய ஜோடியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதனால் 13-21, 12-21 என தோல்வியடைந்தது.
போர்ச்சுக்கல் வீராங்கனைக்கு எதிராக ஒரு கேம்-ஐ கூட கைப்பற்ற முடியாமல் 0-4 என பரிதாபமாக தோல்வியடைந்தார் சுதிர்தா முகர்ஜி.
டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுக்கலின் ஃபு யு-வை எதிர்கொண்டார்.
போர்ச்சுக்கல் வீராங்கனையின் வேகத்திற்கு சுதிர்தா முகர்ஜியால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு கேம்-களையும் 3-11, 3-11, 5-11, 5-11 (0-4) என இழந்து வெளியேறினார்.
வாள்வீச்சு முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்த தமிழக வீராங்கனை பவானி தேவி, 2-வது சுற்றில் தோல்வியுற்று ஏமாற்றம் அடைந்தார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், பெண்களுக்கான தனிநபர் சப்ரே முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நடியாவை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டாவது சுற்றில் பிரான்ஸை சேர்ந்த மனோனுடன் போட்டியிட்டதில், 7-15 என்ற கணக்ககில் தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார்.
இதில் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற கணக்கில் சரத் கமல் வென்றார். இதன்மூலம் 4-2 என்ற செட் கணக்கில் வென்ற சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை ஆண்களுக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியிருடன் மோதினர்.
இதில் முதல் 2 செட்டை இந்திய அணி வென்றது, மூன்றாவது செட்டை கஜகஸ்தான் வென்றது. நான்காவது மற்றும் கடைசி செட்டை இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 6- 2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி துனிசிய வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.
இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.