என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். முடிந்த 2 நாளில், அதாவது அக்டோபர் 17-ம் தேதி 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
    மும்பை:

    இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்டது. 4 அணியைச் சேர்ந்த வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி இந்த தொடர் மே 2-ம் தேதியோடு தள்ளிவைக்கப்பட்டது. அப்போது 29 லீக் ஆட்டங்கள் நடந்திருந்தது.

    இதையடுத்து இறுதிப்போட்டி உள்பட எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

    பிசிசிஐ

    இதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதிவரை எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன. மீண்டும் தொடங்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை துபாயில் எதிர்கொள்கிறது. மறுநாள் (செப்.20) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் அபுதாபியில் மோதுகிறது. இறுதிப்போட்டி துபாயில் அரங்கேறுகிறது.

    இந்திய நேரப்படி தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். ஒரே நாளில் 2 போட்டி இருக்கும்போது முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடக்கும். மொத்தம் 7 நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

    துபாயில் 13 ஆட்டங்களும், சார்ஜாவில் 10 ஆட்டங்களும், அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும் (6 வெற்றி, 2 தோல்வி), சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் (5 வெற்றி, 2 தோல்வி), பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் (5 வெற்றி, 2 தோல்வி, மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன்4-வது இடத்திலும் (4 வெற்றி, 3 தோல்வி) உள்ளன.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என கைப்பற்றியது.
    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் தேர்வு செய்தது.

    அதனபடி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அதிர்ச்சி அளித்தனர். 45 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய வேட். சம்பா, வெஸ் அகர் பொறுமையுடன் ஆடினர். வேட், சம்பா தலா 36 ரன் எடுத்து அவுட்டாகினர். வெஸ் அகர் 41 ரன் எடுத்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.1 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    அல்ஜாரி ஜோசப்பை பாராட்டும் வீரர்கள்

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹொப் 38 ரன்னில் வெளியேறினார். 72 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ்  38 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. பூரன்  அரை சதமடித்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹோல்டர் 52 ரன்னில் வெளியேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
    கோவை கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹரி நிஷாந்த், மணி பாரதி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டகாரர் சுரேஷ்குமார் 58 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு ஜோடி 108 ரன்கள் சேர்த்தது. கங்கா ஸ்ரீதர் ராஜா 57 பந்துகளில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 90 ரன்கள் எடுத்தும், சாய் சுதன் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    90 ரன்கள் குவித்த கங்கா ஸ்ரீதர் ராஜு

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அருண் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஹரி நிஷாந்துடன் விக்கெட் கீப்பர் மணிபாரதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தங்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்த நிலையில் மணி பாரதி வெளியேறினார். அவர் 32 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    அடுத்து இறங்கிய விவேக் டக் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹரி நிஷாந்த் 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 70 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மணிபாரதிக்கு அளிக்கப்பட்டது.
    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்தார். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
    கொழும்பு:

    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ்

    இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் சரித் அசலங்கா 26 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவரில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
    கொழும்பு:

    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

    துவக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, சமீரா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்து கவனமாக ஆடினர். சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  

    கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளை சந்தித்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார்.  சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் விளாசினார்.

    ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    பிருத்வி ஷா முதல் பந்திலேயே ஆட்டமிழந்த பின்னர் கேப்டன் தவான், சஞ்சு சாம்சன் இருவரும் கவனமாக ஆடினர்.
    கொழும்பு:

    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

    துவக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, சமீரா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்து கவனமாக ஆடினர். சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான பிருத்வி ஷா, மூன்று போட்டிகளிலும் முறையே 43, 13 மற்றும் 49 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி அறிமுகம் ஆகினர்.
    கொழும்பு:

    இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தவான் தலைமையிலான இந்திய அணி 2-1 எனக்கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷிகர் தவான், 2. பிருத்வி ஷா, 3.  இஷான் கிஷன், 4. சூர்யகுமார் யாதவ், 5. சஞ்சு சாம்சன், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. குருணால் பாண்ட்யா, 8. தீபக் சாஹர், 9. புவனேஷ்வர் குமார், 10. சாஹல், 11. வருண் சக்கரவர்த்தி.

    இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அவிஷ்கா பெர்னாண்டோ, 2. மினோட் பானுகா, 3.  அஷேன் பண்டாரா, 4. தனஞ்ஜெயா டி சில்வா, 5. சாரித் அசலங்கா, 6. ஷனகா (கேப்டன்), 7. சமிகா கருணாரத்னே, 8. ஹசரங்கா, 9. உதனா, 10. சமீரா, 11. அகிலா தனஞ்ஜெயா
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லைகா கோவை கிங்ஸ் 2 போட்டியில் 1 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவை மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடி, அதில் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

    கோவை அணி வீரர்கள்:-

    கங்கா ஸ்ரீதர், சாய் சுதர்சன், வெங்கட்ராமன், முகிலேஷ், ஷாரூக் கான், சுரேஷ் குமார், அபிஷேக் தன்வார், செல்வா, விக்னேஷ், அஜித் ராம், ஸ்ரீனிவாசன்.

    திண்டுக்கல் அணி வீரர்கள்;-

    அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமி, சிலம்பரசன்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணியின் வீரர் அட்னன் கான் சிறப்பாக ஆடி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியார்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் மதுரை அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்டசமாக கவுசிக் 42 ரன்கள் எடுத்தார். 

    138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக அமித் சாத்விக், சுமந்த் ஜெயின் களமிறங்கினர். முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது திருச்சி அணி 10 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இந்நிலையில் அட்னன் கான் - ஆதித்ய கணேஷ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பாக ஆடிய அட்னன் கான் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அந்தோணி தாஸ் 2, மதிவண்ணன் 6 ஆதித்யா கணேஷ் 41 ரன்களில் வெளியேறினார். பரப்பரப்பான கட்டத்தில் 2 ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் மட்டுமே இருந்தது. 19-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

    ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் ஆண்களுக்கான 61 கிலோ எடைப்பிரிவில் சீன வீரர் ஃபேபின் லி தங்கப்பதக்கம் வென்றார்.
    ஒலிம்பிக்கில்  61 கிலோ எடைப்பிரிவு ஆண்கள் பளு தூக்குதல் இறுதி போட்டி இன்று பிற்பகல் நடந்தது. இப்போட்டியில் 9 பேர் கலந்து கொண்டனர். அதில், சீனாவை சேர்ந்த ஃபேபின் லி ஸ்னாட்ச் முறையில் 141 கிலோ எடை தூக்கியும், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 172 கிலோ எடை தூக்கியும்  313 கிலோவுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதிக அளவில் எடை தூக்கி முதல் இடத்தை பெற்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.

    விவரம்

    இந்தோனேசியாவை சேர்ந்த கோ யுகி ஐரவான்  (302 கிலோ) இரண்டாவது இடத்தையும். கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த இகோர் சன் (294 கிலோ) மூன்றாவது இடத்தையும் பிடித்து முறையெ வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றனர்.
    ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
    டோக்கியோ:

    ஒலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏ பிரிவுக்கான இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-7 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

    இந்தியா தரப்பில் சிங் தில்பிரீத் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் கோவர்ஸ் இரண்டு கோல்களும், பிராண்ட், பெலிட்ஸ், ஓகில்வீ, ஹேவார்டு, பீல் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணி டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. இதில், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக அருண் கார்த்திக், ராஜ்குமார் களமிறங்கினர்.

    மதுரை அணி: அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ராஜ்குமார், அனிருத் சீதாராம், சதுர்வேதி (கேப்டன்) ஜெகதீசன் கவுசிக், ஷாஜகான், மிதுன், ராமலிங்கம் ரோகித், சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆயுஷிக் ஸ்ரீனிவாஸ்.

    திருச்சி அணி: அமித் சாத்விக், சுமந்த் ஜெயின், முகுமது அட்னன் கான், நிதிஷ் ராஜகோபால், அந்தோணி தாஸ், சுனில் சாம், ஆதித்ய கணேஷ் (கீப்பர்), மதிவண்ணன், ரகில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, சரவண குமார்.
    ×