search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கப் பதக்கம் வென்ற ரஷியா ஆண்கள் ஜிம்னாஸ்டிக் அணி
    X
    தங்கப் பதக்கம் வென்ற ரஷியா ஆண்கள் ஜிம்னாஸ்டிக் அணி

    டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்கள் ஜிம்னாஸ்டிக் பிரிவில் ரஷியா தங்கப் பதக்கம்

    டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் ரஷியா தங்கப் பதக்கம் வென்றது.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் அணிகள் பிரிவில் நிகிதா நகோர்னி தலைமையிலான ரஷிய அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் 1996-க்கு பிறகு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    முதல் இடத்தை பிடித்த ரஷியா 262.500 புள்ளிகள் பெற்றிருந்தது. இரண்டாவதாக ஜப்பான் 262.397 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது. 261.397 புள்ளிகள் பெற்ற சீனாவுக்கு வெண்கலம் வென்றது.
    Next Story
    ×