என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
    • 10 நிபுணர்கள் மற்றும் 120 விமர்சகர்களின் மறு ஆய்வு பணி மற்றும் இரட்டை தர மதிப்பாய்வு மூலம் 194 ஆய்வுக்கட்டுரை கள் விளக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில் அனைத்து பொறியியல் துறை சார்பில் ஐ.இ.இ.இ. ஐ.சி.ஸ்கேன் 2023" சிஸ்டம்ஸ், கம்ப்யூ டேஷன், ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதன் தொடக்க விழா வில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளா ளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர்.

    சென்னை கிரெசென்ட் பல்கலைக்கழக ஆலோசகர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முருகேசன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.இ.இ.இ. சென்னை பிரிவு தலை வரும் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வருமான மூத்த பேராசிரியர் பொற்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.

    முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், கல்லூரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர் வள்ளி, கருத்தரங்க செயல் பாடுகள் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.

    இந்த 2 நாள் கருத்தரங்கில், சர்வதேச அளவில் ஆறு நாடுகள் மற்றும் இந்தியாவி லிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 602 ஆய்வுக் கட்டுரைகளில், 50-க்கும் மேற்பட்ட சர்வதேச தர மதிப்பாய்வு நிபுணர்கள், 10 நிபுணர்கள் மற்றும் 120 விமர்சகர்களின் மறு ஆய்வு பணி மற்றும் இரட்டை தர மதிப்பாய்வு மூலம் 194 ஆய்வுக்கட்டுரை கள் விளக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    • கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.
    • விழாவில் பொதுமக்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங் குப்பம் கிரா மத்தில் பம்பா வாசன் அய்யப்பன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளா கத்தில் அய்யப்ப பக்தர்கள் இணைந்து ஊஞ்சல் உற்சவம் நடத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி, பம்பாவாசன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர். விழாவில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
    • நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் மீண்டும் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ளது.

    இந்த நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது.

    புதுவை மாநிலத்திலும் பா.ஜனதா கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அவர்கள் பல்வேறு கூட்டங்கள் நடத்தி பிரதமர் மோடியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

    இதற்கிடைய கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணியில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மேல்சபை எம்.பி. பதவியை பா.ஜனதாவிற்கு விட்டுக்கொடுத்தது.

    எனவே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் மீண்டும் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த நிலையில் மத்திய மந்திரியும் பா.ஜனதா புதுவை மாநில பொறுப்பாளருமான எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரி வந்தார். அவர் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி தொகுதியில் போட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்றும், தொகுதி வாரியாக பூத் கமிட்டியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா கட்சி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் அனுசரிப்பு
    • சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மத்திய இணை மந்திரி முருகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார், செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், ரிச்சர்ட் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் புதிய நீதி கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
    • திருமண உதவித் தொகையாக 188 பேருக்கு ரூ.51 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள மணப்பெண்ணின் திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் வீதம் 407 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது. ஆதரவற்ற விதவைப் பெண் மகள் திருமண உதவித் தொகையாக 188 பேருக்கு ரூ.51 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு பெண், 2 பெண் குழந்தை உதவித் தொகையாக 150 பேருக்கு ரூ.45 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏழை பெற்றோரின் குடும்பத்தில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் ஒரே பெண் குழந்தைக்கு உதவித் தொகையாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
    • அரசு குடியரசு தலைவராகி பெருமைப்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த பழங்குடியினர் கவுரவப்படுத்தும் விழாவில் பழங்குடியினரை தரையில் அமர வைத்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. 

    இந்த நிலையில் புதுவை லாஸ்பேட்டை விவேகா னந்தா பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் பா.ஜனதா சார்பில் பழங்குடி சமூக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுவை பா.ஜனதா மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி. தலைைம தாங்கினார்.

    நிகழ்ச்சியில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் அசோக் பாபு எம்.எல்.ஏ, ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட தியாகி மிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ந்் தேதி பழங்குடியின மக்களின் கவுரவ தினமாக பிரதமர் மோடி கொண்டாடி னார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்காக திட்டங்களை தொடங்கி வைத்தார். யார் யாரெல்லாம் சமூக நீதி பேசும் இங்கு சமூக நீதி காக்கும் ரியல் ஹீரோவாக பிரதமர் மோடி விளங்குகிறார்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்த உடன் சிறுபான்மை யினர் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் கலாமை குடியரசு தலைவரானது 2014-ல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவரானது, மீண்டும் 2019 மோடி தலைமையிலான ஆட்சியில் நமக்காக பழங்குடியின மக்களுக்காக பேசக்கூடிய வகையில் பழங்குடியின மக்களில் ஒருவரான திரவுபதி முர்மு ஒருவரை பா.ஜனதா அரசு குடியரசு தலைவராகி பெருமைப்படுத்தி உள்ளது.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது பழங்குடி யினருக்கான தனி ஆணை யம் அமைக்கப்ப ட்டது. பிரதமர் மோடி ஒரு கோடியே 25 லட்சம் பழங்குடியின வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்துள்ளார். 1.5 கோடி பழங்குடியின வீடுகளுக்கு கழிவறையும், 50 லட்சம் பேருக்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. 95 லட்சம் பழங்குடி யின மக்கள் விவசாய தொகை பெறுகின்றனர்.

     ரத்த சோகை அதிகம் உள்ள பழங்குடியின மக்களின் 58 லட்சம் பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மேலும் 7 கோடி பேருக்கு இந்த பரிசோதனை நடக்க உள்ளது. பழங்குடியின மாணவர்கள் கல்வி பெறவும் வெளிநாடுகளில் தங்கி படிக்கவும் 17 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 111 மாணவர்கள் வெளிநாட்டில் தங்கி படிக்கும் நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.

    மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்கள் படிப்பதற்காக நாடு முழுவதும் 401 பள்ளிகள் ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்பட்டு 1.5 லட்சம் மாணவ மாணவிகள் அங்கு தங்கிப் படித்து வருகின்றனர்.

    நாடோடிகளாக செல்லும் பழங்குடியின மக்களுகளின் நலனை க் காக்க பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி மிர்சா முண்டா போன்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10 சுதந்திர போராட்ட வீரர்க ளுக்கு அருங்காட்சியகம் அமைத்துள்ளார்.

    நான் எஸ்.சி. கமிஷனில் பணியாற்றிய போது புதுவை சேர்ந்த பழங்குடி யின கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் என்னிடம் வந்து புதுவையில் உள்ள பழங்குடி யின மக்களின் நலனுக்காக கோரிக்கைகளை வைத்தார். உடனே எஸ்.டி. கமிஷன் அதிகாரிகள் அழைத்து நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருந்தேன்.

    புதுவையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எம்.பி. செல்வகணபதி பல்வேறு வகையில் உதவி களை செய்து வருகிறார்.

    இதேபோல் நம்முடைய சபாநாயகர், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் பழங்குடியின மக்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

    இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் எல். முருகனி டம் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் மத்திய மந்திரி எல்.முருகன், சபாநாயகர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள் உணவு அருந்தினர்.

    • அனைத்து தொழிற்சங்கத்தினர் முடிவு
    • பா.ஜனதா அரசை கண்டித்தும் வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை சி.ஐ.டி.யூ. மாநில குழு அலுவலகத்தி நடந்தது.

    சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் பிரபுராஜ், துணைத்தலைவர் முருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொருளாளர் அந்தோணி, ஐ.என்டி.யூ.சி. பொதுச் செயலாளர் ஞானசேகரன், துணைத் தலைவர் சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. பொதுச் செயலாளர் புருஷோத்தமன்,

    எல்.எல்.எப். செயலாளர் செந்தில், எம்.எல்.எப். செயலாளர் வேதா வேணுகோபால், மாநில தலைவர் மாசிலாமணி, என்.டி.எல்.எப் பொது செயலாளர் மகேந்திரன், பிற தொழிற்சங்க நிர்வாகி கள் சங்கர், ராமமூர்த்தி, லிக்காய் , சரவணன், குண சேகரன், தினேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தொழிலாளர் விரோத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், கொடுத்த வாக்கு றுதியை நிறை வேற்றாத புதுவை என்.ஆர்..காங்கிரஸ், பா.ஜனதா அரசை கண்டித்தும் வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தை விளக்க வருகிற 25, 27-ம் தேதிகளில் சேதராப்பட்டு, முதலியார்பேட்டை, பாகூரில் தெரு முனைக்கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

    • அமைச்சர் சாய். ஜெய். சரவணன் குமார் இயக்கி வைத்தார்
    • ரூ. 17 லட்சத்தில் புதிதாக அமைக்க பட்ட டிரான்ஸ்பார்மரை அமைச்சர் சாய்.ஜெய் .சரவணன் குமார் இயக்கி வைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட கல்மேடுபேட் பகுதியில் அவ்வபோது மின் பற்றாக்குறை ஏற்படுவதால் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தீவிர முயற்சியால் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அதன்படி ரூ. 17 லட்சத்தில் புதிதாக அமைக்க பட்ட டிரான்ஸ்பார்மரை அமைச்சர் சாய்.ஜெய் .சரவணன் குமார் இயக்கி வைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர், ராமநாதன், உதவி பொறியாளர் தணிகாசலம், இளநிலை பொறியாளர்கள் முத்துக்குமார், சிவராஜ், வெங்கடேசன், ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய் தியாகராஜன், கல்மேடு பேட் கட்சி நிர்வாகிகள் செல்வாநாதன், பிரகாஷ்,கார்த்தி, ராஜேஷ், பிரதாப், பழனிவேல், மின் துறை பொறுப்பாளர் ஆனந்த் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இடித்து அகற்றினர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலை பணிக்கு தேவையான இடங்கள் அரசால் கையகப்படுத்தப் பட்டது.

    வில்லியனூர் அருகே அரியூரில் 50 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலை, விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இடித்து அகற்றினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். கிராம மக்கள் கோரிக்கையை கேட்டறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, இடிக்கப்பட்ட அங்காளம்மன் கோவிலை அரியூரில் வேறு இடத்தில் புதிதாக கட்டித்தருவதாக உறுதியளித்தார்.

    இதையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் 4 வழி சாலைக்கு அருகாமையில் மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை விழுப்புரம்- புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது. இந்த சாலைக்கு எதிர்புறம் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பள்ளி என கல்வி நிறுவனங்கள் உள்ளன.

    பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறு முனைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையைத்தான் கடந்து செல்ல வேண்டும். ஆனால் நெடுஞ்சாலை பணி யாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொது மக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை தாண்டி கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் இருந்து எதிரே உள்ள சாலைக்கு செல்வதற்கு எந்த இடை யூறும் இல்லாமல் பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஆனால் போலீசாரோ அதிகாரிகளோ அப்பகுதிக்கு வராததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

    அதன் பின்னர் தகவல் அறிந்த திருபுவனை போலீசார் மற்றும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காலை நேரம் என்பதால் கல்லூரி-பள்ளி வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலதாமதமாக சென்றனர்.

    • பணி முடிந்து தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை இஞ்ஞாசி மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன் (வயது41). இவர் புதுைவ செஞ்சி சாலையில் தனியார் நிதி நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் பணி முடிந்து தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் வெங்கட கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வெங்கட கிருஷ்ணன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் காலியாக நிரப்படாமல் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி மாகி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சேர்க்கை பெற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கை இறுதி கட்ட சிறப்பு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட சிறப்பு கலந்தாய்வு மூலம் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 10 மருத்துவ இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

    புதுவை பகுதி தாழ்த்தப்பட்ட பிரிவைசேர்ந்த ஒரு மாணவி சான்றிதழ் அடிப்படையில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் காலியாக நிரப்படாமல் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி மாகி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சேர்க்கை பெற்றார்.

    எனவே புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 830-இளநிலை மருத்துவ இடங்களும் நிரப்பபட்டுள்ளது.

    சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட 830- இளநிலை மருத்துவ இடங்களின் மாணவர் சேர்க்கை விபரங்களை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிடமிருந்து பெற்று செண்டாக் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.

    மேலும் தேசிய மருத்துவ கவுன்சில், புதுவை பல்கலைக்கழத்திற்கும், மற்றும் புதுவை சுகாதாரத் துறைக்கும் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதனடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் 2023-2024 மருத்துவ மாணவர் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×