என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்.
எம்.ஐ.டி. கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

- கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
- 10 நிபுணர்கள் மற்றும் 120 விமர்சகர்களின் மறு ஆய்வு பணி மற்றும் இரட்டை தர மதிப்பாய்வு மூலம் 194 ஆய்வுக்கட்டுரை கள் விளக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில் அனைத்து பொறியியல் துறை சார்பில் ஐ.இ.இ.இ. ஐ.சி.ஸ்கேன் 2023" சிஸ்டம்ஸ், கம்ப்யூ டேஷன், ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
இதன் தொடக்க விழா வில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளா ளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை கிரெசென்ட் பல்கலைக்கழக ஆலோசகர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முருகேசன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.இ.இ.இ. சென்னை பிரிவு தலை வரும் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வருமான மூத்த பேராசிரியர் பொற்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், கல்லூரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர் வள்ளி, கருத்தரங்க செயல் பாடுகள் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.
இந்த 2 நாள் கருத்தரங்கில், சர்வதேச அளவில் ஆறு நாடுகள் மற்றும் இந்தியாவி லிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 602 ஆய்வுக் கட்டுரைகளில், 50-க்கும் மேற்பட்ட சர்வதேச தர மதிப்பாய்வு நிபுணர்கள், 10 நிபுணர்கள் மற்றும் 120 விமர்சகர்களின் மறு ஆய்வு பணி மற்றும் இரட்டை தர மதிப்பாய்வு மூலம் 194 ஆய்வுக்கட்டுரை கள் விளக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.