என் மலர்
புதுச்சேரி
வில்லியனூர் அருகே 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் சிறார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண் என்கிற அருண்குமார் (வயது 26). இவருக்கும், தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2-ந் தேதி அருண்குமாரை கொலை செய்வதற்காக முகிலன், அவரது தம்பி முரளி (20), கொடாத்தூர் சந்துரு (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்குப்பம் கிராமத்துக்கு வந்து, ஆயுதங்களை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை கிராம மக்கள் சுற்றிவளைத்தனர். இதில் ரவுடிகளான முரளி, சந்துரு இருவரும் சிக்கிக்கொண்டனர். முகிலன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அருண்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கிராம மக்களிடம் சிக்கிய முரளி, சந்துருவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருண்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பிரேம்நாத் (25), சிலம்புசெல்வன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பிள்ளையார்குப்பம் முத்துராமன் (24), வெற்றிவேல் (22), வழுதாவூர் சுரேஷ் (21) மற்றும் 18 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அரசு வழிகாட்டுதலின்படி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 சிறுவர்கள் உள்பட 8 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவுப்படி அருண்குமார் உள்பட 6 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் அரியாங்குப்பத்தில் உள்ள சிறார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடைகள் மூடப்படும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:
கவர்னர் கிரண்பே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக குற்றவழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது கடைகள் விழிப்புணர்வின்றி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. கடைகள், மார்க்கெட்டுகள் போன்றவை தொற்று நோய்களுக்கான மையமாக மாறி வருகிறது. கடை வைத்து இருப்பவர்களும், அவர்கள் இணைந்து இருக்கும் சங்கங்களும் சேர்ந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உங்களுடைய சேவை அளிக்கப்படும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவும். இந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் அரைநாள் மூடப்பட்டு பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படலாம். இது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 70 புதிய நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விரைவில் இந்த பரவல் 100 நபர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வருமுன் காப்பதே சிறந்தது. தயவு செய்து கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒத்துழைக்கவும். நம் அனைவருடைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், உணவு மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்களை சந்தித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தித் தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுவையில் மேலும் 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 1.மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 8-வது குறுக்குத்தெரு, 2.ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 3-வது குறுக்குத்தெரு, 3.ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 2-வது குறுக்குத்தெரு, 4.தட்டாஞ்சாவடி முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதி, 5.தட்டாஞ்சாவடி இந்திரா நகர் விரிவு விவேகானந்தா நகர், 6.லாஸ்பேட்டை செயிண்ட் பால்பேட் மாரியம்மன் கோவில் வீதி, 7.தட்டாஞ்சாவடி செயின்ட் ஜி.டி. நகர் மாரியம்மன் கோவில் வீதி, 8. ரெட்டியார்பாளையம் சாரதாம்பாள்நகர் அஜந்தா அப்பார்ட்மென்ட் ஆகிய 8 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்தான நிலையில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் பிளஸ்-1 தேர்வில் ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்தத் தேர்வுகளை நடத்த அரசு முயற்சி எடுத்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி புதுவை மற்றும் காரைக்காலில் 236 பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் மதிப்பெண் மற்றும் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் புதுவை கல்வித் துறையால் சேகரிக்கப்பட்டது.
அதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதாத 13,597 மாணவ-மாணவிகள் மற்றும் பிளஸ்-1 படித்த 12,644 மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவ, மாணவிகளின் மதிப்பெண் மற்றும் விடைத்தாள் வருகைப் பதிவேட்டு விவரங்களை 100 பேர் கொண்ட ஆசிரியர் குழு சரி பார்த்தது.
இதன்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமையில் இணை இயக்குனர் குப்புசாமி, சிறப்பு பணி அதிகாரி நடன சபாபதி மற்றும் துணை முதல்வர் ஆல்பர்ட் டொமினிக் ராயன், தலைமையாசிரியர் அச்சுதன் மற்றும் ஆசிரியர்களை கொண்ட குழுவினர் இந்த பட்டியலை தயார் செய்துள்ளனர்.
இந்த பட்டியல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மதிப்பெண்கள் விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 487 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,23,724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,22,350 பேருக்கும், டெல்லியில் 1,04,864 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 619 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தொற்று உறுதியான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துங்கள் என்று அமைச்சருக்கு, கவர்னர் கிரண்பேடி பதிலடி கொடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கவர்னர் கிரண்பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:- -
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஊடகத்துக்கு பேட்டி அளிக்கும்போது என் மீதும், மற்றவர்கள் மீதும் பலவித குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதை பார்க்கும் போது கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இவ்வாறு தவறான தகவல்களை கூறமாட்டார். இருப்பினும் இவை அனைத்தும் புதுச்சேரிக்கு மிகுந்த ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதில் கவர்னர் மாளிகை தீர்மானத்தில் எந்த விதமான கவனச்சிதறலையும் ஏற்படுத்தாது.
அமைச்சருக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த நெருக்கடி நேரத்தில் புதுச்சேரி மக்களுக்கு முதல் முன்னுரிமையாக வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நாடு எதிர்கொள்ளும் முன்பார்த்திராத நெருக்கடியைச் சமாளிக்க, எவர் ஒருவரிடம் இருந்தும் எந்தவொரு ஆதரவும் வரவேற்க தக்கவையே கவர்னர் மாளிகை குழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் புதுச்சேரி மக்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதும், புதுச்சேரியில் எங்களிடம் உள்ள கையிருப்பை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதுமாகும். மனித இடர்பாடுகளையும் மற்றும் பொருளாதார இழப்புகளையும் குறைக்க நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்துவதே கவர்னர் மாளிகையின் உறுதிப்பாடாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்படுகிறது.
ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. தொற்று உறுதியான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கவர்னர் கிரண்பேடி நலமுடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதுவையில் மேலும் 16 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இடத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று 16 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
1. மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 9-வது குறுக்கு தெரு, 2. சண்முகாபுரம் அண்ணா வீதி, 3. ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 1-வது குறுக்கு தெரு, 4. எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்து வீதி முத்து குடியிருப்பு, 5. மேட்டுப் பாளையம் மருத்துவமனை வீதி, 6. தட்டாஞ்சாவடி வீமன் நகர் ஓடைவீதி, 7. காமராஜர் நகர் பெரியார் வீதி, 8. இந்திரா நகர் விவேகானந்தா வீதி, 9. ஜி.டி. நகர் மாரியம்மன் கோவில் வீதி 2-வது குறுக்கு தெரு, 10. காந்தி திருநல்லூர் ஓடை வீதி, 11. கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் தவமணி நகர் 3-வது குறுக்கு தெரு, 12. சண்முகபுரம் நெசவாளர் குடியிருப்பு, 13. லாஸ்பேட்டை தமிழன்னை 2-வது குறுக்கு தெரு, 14. ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் கண்ணுசாமி வீதி, 15. பாக்கமுடையான்பட்டு முதன்மை சாலை, 16. சாரம் காமராஜ் நகர் விநாயகர் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுவையில் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாடினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒருவர் கொரோனாவால் பாதித்தால் அவரது வீட்டருகே சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு உள்ள பகுதியை கட்டுப்பாட்டுப் மண்டலமாக அறிவித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சிலர் வெளியில் நடமாடுவது தெரியவந்து உள்ளது. இதனால் அந்த நபர்களால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
இதை தடுக்கும் விதமாக புதுவை காவல் துறையில் கோவிட் 19 வார்ரூம் என்று கட்டுப்பாட்டு அறை என்று புதிதாக குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்களின் குறித்த முழு விவரங்களையும் திரட்டி தங்கள் கைவசம் வைத்துக்கொள்வார்கள். அதைக்கொண்டு அவர்கள் வெளியில் எங்கேயேனும் நடமாடுகிறார்களா? என்பதை உன்னிப்பாக கவனித்து வருவார்கள். அவ்வாறு யாரேனும் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் யாரேனும் அதைத்தாண்டி வெளியே நடமாடினால் 112, 100, 1031 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கவர்னர் கிரண்பேடி இருக்கும் வரை புதுவையில் 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதிய ஜனதா வளராது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2½ ஆண்டுகளாக கவர்னர் கிரண்பேடிக்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள 23 அதிகாரிகளில் ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லையா? கவர்னரின் ஆலோசகரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசுக்கு தெரியாமல் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு பெண் அதிகாரியும், பிரேம் என்ற ஒரு புரோக்கரும் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டால் உடனே வேலை நடக்கிறது. அங்கு நிறைய பேரம் நடப்பதால் இதுதொடர்பான விவரங்களை சி.பி.ஐ.க்கு அனுப்பவும் தயார். கவர்னருக்கு தெரிந்தேதான் இது நடக்கிறது.
புதுவை அரசு பஸ்களை கவர்னரின் ஆய்வுக்கு பயன்படுத்தியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் அது தொடர்பான கோப்புகள் தொலைந்து விட்டது என்கிறார்கள். சாலை போக்குவரத்துக் கழகம் தந்த பதிவில் அது தொடர்பான தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறுகிறது.
கவர்னர் கிரண்பேடி வீடியோ, புகைப்படத்திற்கு மாதம் ரூ.5 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. தாசில்தாரை போலீசார் தாக்கியதில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொடுக்கக்கூடாது என்று கவர்னரே கடிதம் எழுதுகிறார். புதுச்சேரிக்கு வந்த புதிதில் 2 வருடத்துக்கு மேல் இருக்க மாட்டேன் என்றார். இப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால், நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தாமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களையும் நிறுத்துகிறார். இவரது நடவடிக்கையினால் கொரோனா கட்டுப்படுத்தியதாக சிலரிடம் கூறி விளம்பரம் செய்ய சொல்கிறார்.
நான் பலமுறை கொரோனா ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் கவர்னர் கிரண்பேடி என்றைக்காவது வெளியே வந்தாரா? இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்காக என்ன செய்தார். இவர் புதுச்சேரியில் இருக்கும் வரை 100 ஆண்டுகளானாலும் பாரதிய ஜனதா கட்சி வளராது. கவர்னர் மீது பல வழக்குகள் உள்ளன. நான் இவரை கண்டுபயப்பட மாட்டேன். இவரால் தான் மீனவர்களுக்கான முதியோர் பென்சன், சேமிப்பு தொகை போன்றவை கிடைக்கவில்லை.
இந்த அரசு இருக்கக் கூடாது, புதுவை மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று செயல்படுகிறார். கவர்னரின் தவறான செயல்பாட்டினால் புதுச்சேரியின் வளர்ச்சி 20 வருடம் பின் தங்கி விட்டது. இதை யாராலும் தூக்கி நிறுத்துவது கடினம்.
இவ்வாறு அவர் கூறினார்.