search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்- அமைச்சருக்கு, கவர்னர் கிரண்பேடி பதிலடி

    மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துங்கள் என்று அமைச்சருக்கு, கவர்னர் கிரண்பேடி பதிலடி கொடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கவர்னர் கிரண்பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:- -

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஊடகத்துக்கு பேட்டி அளிக்கும்போது என் மீதும், மற்றவர்கள் மீதும் பலவித குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதை பார்க்கும் போது கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இவ்வாறு தவறான தகவல்களை கூறமாட்டார். இருப்பினும் இவை அனைத்தும் புதுச்சேரிக்கு மிகுந்த ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதில் கவர்னர் மாளிகை தீர்மானத்தில் எந்த விதமான கவனச்சிதறலையும் ஏற்படுத்தாது.

    அமைச்சருக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த நெருக்கடி நேரத்தில் புதுச்சேரி மக்களுக்கு முதல் முன்னுரிமையாக வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நாடு எதிர்கொள்ளும் முன்பார்த்திராத நெருக்கடியைச் சமாளிக்க, எவர் ஒருவரிடம் இருந்தும் எந்தவொரு ஆதரவும் வரவேற்க தக்கவையே கவர்னர் மாளிகை குழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் புதுச்சேரி மக்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதும், புதுச்சேரியில் எங்களிடம் உள்ள கையிருப்பை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதுமாகும். மனித இடர்பாடுகளையும் மற்றும் பொருளாதார இழப்புகளையும் குறைக்க நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்துவதே கவர்னர் மாளிகையின் உறுதிப்பாடாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×