search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
    X
    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

    புதுவையில் மேலும் 16 கட்டுப்பாட்டு மண்டலம்- கலெக்டர் அருண் தகவல்

    புதுவையில் மேலும் 16 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இடத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று 16 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    1. மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 9-வது குறுக்கு தெரு, 2. சண்முகாபுரம் அண்ணா வீதி, 3. ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 1-வது குறுக்கு தெரு, 4. எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்து வீதி முத்து குடியிருப்பு, 5. மேட்டுப் பாளையம் மருத்துவமனை வீதி, 6. தட்டாஞ்சாவடி வீமன் நகர் ஓடைவீதி, 7. காமராஜர் நகர் பெரியார் வீதி, 8. இந்திரா நகர் விவேகானந்தா வீதி, 9. ஜி.டி. நகர் மாரியம்மன் கோவில் வீதி 2-வது குறுக்கு தெரு, 10. காந்தி திருநல்லூர் ஓடை வீதி, 11. கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் தவமணி நகர் 3-வது குறுக்கு தெரு, 12. சண்முகபுரம் நெசவாளர் குடியிருப்பு, 13. லாஸ்பேட்டை தமிழன்னை 2-வது குறுக்கு தெரு, 14. ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் கண்ணுசாமி வீதி, 15. பாக்கமுடையான்பட்டு முதன்மை சாலை, 16. சாரம் காமராஜ் நகர் விநாயகர் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×