என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,336 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 238461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 132625 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9893 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 130261 பேருக்கும், டெல்லியில் 109140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,336ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 690 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் முககவசம் அணிவதில் முன்னேற்றத்தை காண முடிகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மேலும் உழைக்க வேண்டுமென கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று மாலை கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? எனவும் கேட்டறிந்தார்.
பின்னர் டாக்டர்களிடம் நோயாளிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். இதேபோல் கொசப்பாளையம், ரெட்டியார்பாளையம் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதியை தனது காரில் இருந்தபடியே பார்வையிட்டார்.
இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தற்பொழுது முககவசம் அணிவதில் முன்னேற்றத்தை காண முடிகிறது. சமூக இடைவெளி கடைபிடிபிடிபதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஒருவரை அடுத்து ஒருவர் வாங்கும் பழக்கம் இன்னும் ஏற்படவில்லை. இதை அமலாக்க இன்னும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.-வான தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் தனவேலு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னதாக, தமது பாகூர் தொகுதியில் அரசு திட்டங்களை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆளுநர் ஆய்வு செய்ய வந்தால் செல்லக்கூடாது என்று எனக்கு அழுத்தம் தரப்பட்டது எனவும் அரசு மருத்துவமனை குறைகளை பேசக்கூடாது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் என்னை தடுத்தனர் என தனவேலு குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அங்கு கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் 6வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரியாங்குப்பத்தில் கொரோனா பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொள்வதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
அரியாங்குப்பம்:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமப்புற மக்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நேற்று கொரோனா தொற்று கண்டறியும் முகாம் நடைபெற்றது.
முகாமை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தொடங்கிவைத்தார். சுகாதார துறை இணை இயக்குனர் ரகுநாதன் மேற்பார்வையில் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தாரணி தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் போலீசார், அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முகாமை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திடீரென்று ஆய்வு செய்து, சுகாதாரத்துறையினருக்கு ஆலோசனைகள் கூறினார். இந்த முகாமில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக காலை 8.30 மணி முதல் பொதுமக்கள் வர தொடங்கினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்கள் சமூக இடைவெளியில் உட்கார வைத்து, பரிசோதனை செய்யப்பட்டது.

புதுவையில் மேலும் 27 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
16.கருவடிக்குப்பம் சாமிபிள்ளை கோவில் வீதி. 17.சாரம் வாணிதாசன் நகர், 18.குருசுக்குப்பம் பத்மினி நகர் பிள்ளையார்கோவில் வீதி, 19.முத்திரையர்பாளையம் சக்தி நகர். 20.சண்முகாபுரம் வழுதாவூர் சாலை, 21.லாஸ்பேட்டை லட்சுமி நகர், 22.பாகூர் நேரு வீதி, 23.புதுவை சின்னமணிக்கூண்டு மிலாது வீதி, 24.அய்யங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, 25.சாமிபிள்ளைத்தோட்டம் தவமணி நகர் 3-வது குறுக்குத்தெரு, 26.கோர்காடு புதுநகர், 27.முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகர் தென்றல்வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் பொதுபோக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
அதன்படி 1.லாஸ்பேட்டை மாகவீர் நகர் 2-வது முதன்மை சாலை, 2.தர்மாபுரி தனகோடி நகர் அப்துல்கலாம் வீதி, 3.சண்முகாபுரம் வி.வி.சிங் நகர், பாரதிதாசன் வீதி, 4.தட்டாஞ்சாவடி வீமன் நகர் மேட்டுத்தெரு, 5.கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகர் விநாயகர் கோவில் வீதி, 6. தட்டாஞ்சாவடி ஜி.டி. நகர் முதல் குறுக்குத்தெரு, 7.சாரம் காமராஜ் நகர் மொட்டைத்தோப்பு அண்ணாமலை நகர், 8.சாரம் சின்னையன்பேட்டை விநாயகமுருகன் நகர் 2-வது குறுக்குத்தெரு, 9.முத்தியால்பேட்டை வசந்த் நகர் வைகை வீதி, 10.சாமிபிள்ளைத்தோட்டம் தமிழ்ஒளி வீதி, 11.சாமிபிள்ளைத்தோட்டம் 8-வது குறுக்குத்தெரு, 12.மேட்டுப்பாளையம் வழுதாவூர்சாலை, 13.வெங்கட்டா நகர் 5-வது குறுக்குத்தெரு, 14.சண்முகாபுரம் மாணிக்கசெட்டியார் நகர் நெசவாளர் குடியிருப்பு, 15.குயவர்பாளையம் வாணிதாசன் வீதி,
16.கருவடிக்குப்பம் சாமிபிள்ளை கோவில் வீதி. 17.சாரம் வாணிதாசன் நகர், 18.குருசுக்குப்பம் பத்மினி நகர் பிள்ளையார்கோவில் வீதி, 19.முத்திரையர்பாளையம் சக்தி நகர். 20.சண்முகாபுரம் வழுதாவூர் சாலை, 21.லாஸ்பேட்டை லட்சுமி நகர், 22.பாகூர் நேரு வீதி, 23.புதுவை சின்னமணிக்கூண்டு மிலாது வீதி, 24.அய்யங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, 25.சாமிபிள்ளைத்தோட்டம் தவமணி நகர் 3-வது குறுக்குத்தெரு, 26.கோர்காடு புதுநகர், 27.முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகர் தென்றல்வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் பொதுபோக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை இன்று முதல் திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த மார்ச் மாதம் கடற்கரை மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் கடற்கரை திறக்கப்பட்டது.
இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது 6-ம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மீண்டும் கடற்கரை சாலை கடந்த 3-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் பல்வேறு கட்சியினர் கடற்கரை சாலையை நடைபயிற்சிக்கு அனுமதிக்கும் வகையில் திறந்துவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் கடற்கரை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு மட்டும் அனுமதிக்கும் வகையில் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடற்கரை சாலை காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எச்சில் துப்பக்கூடாது. பொது நிகழ்ச்சிகளோ, கூட்டங்களோ நடத்த அனுமதி இல்லை. அவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பொதுத் தொடர்புகளில் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும் என்று பொதுமக்களை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய அறியாமையால் மற்றவர்களுக்கும் தொற்று பரப்பி உள்ளார். அவருக்கான சிகிச்சையை அவரே வீட்டில் எடுத்து வருகிறார். புதுச்சேரியில் மற்றொருவர் வீடு, வீடாக சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகி விட்டார். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
மேலும் சிலருக்கு கொரோனா தொற்று நோயாளிகளின் வழியாகவும், சிறிய மதுபான விருந்துகள், ஒரு சிலருடைய வீட்டில் நடந்த பொதுவான விருந்துகளில் பங்கேற்றதால் பரவியது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அதன் மேலாளர்களே பொறுப்பேற்க வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பதியப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முககவச தொழிற்சாலையில் மிக அதிகமான கொரோனா பரவலை ஏற்படுத்தியதை போல மீண்டும் நடக்கக்கூடாது.
தொற்று பரவுவதை தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. நம்மை பாதுகாத்துக் கொள்வதால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். இது அப்படியே நேர்மாறாகவும் பொருந்தும். அனைத்து பொதுத் தொடர்புகளிலும் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும். மேலும் பொழுதுபோக்கிற்காக தெரிந்த வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். வெளியில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதை நீங்கள் அறிய முடியாது. ஒரு வேளை அவர்கள் காய்ச்சலை குறைப்பதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக்கொண்டிருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது தொடர்பாக அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் புதுவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் நிறைய சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடர்பான தகவல் சுப நிகழ்ச்சிகள் நடத்த உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நிருபரிடம் முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ‘ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதே நேரத்தில் முழு ஊரடங்கு வேண்டாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முழு ஊரடங்கு தொடர்பாக அரசு சார்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு ஏதேனும் முடிவெடுத்தால் அரசு உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கும்’ என்றார்.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 475 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 230599 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 127259 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9667 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 126581 பேருக்கும், டெல்லியில் 107051 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,272ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 637 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் மாணவர்கள் நடத்தும் துரித உணவகத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் உணவு வாங்கிச் செல்கிறார்கள்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பலர் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் 5 பேர் ஒன்று சேர்ந்து பாஸ்ட்புட் கடை (துரித உணவகம்) ஒன்றை உப்பளம் துறைமுக வாயிலில் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கி உள்ளனர்.
பழைய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி அதன் பின்னால் அடுப்பு தயார் செய்து கோழி மற்றும் இறாலை கொண்டு விதவிதமான உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து சுடச்சுட வழங்கி வருகின்றனர். மாணவர்களே நடத்தும் இந்த கடை ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நாட்களே ஆனபோதிலும் மக்கள் அதிக அளவில் வந்து உணவு வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பாக மாணவர் அஜித் கூறியதாவது:-
நான் எனது நண்பர்களான வெற்றி, ஆகாஷ், ஹரிஷ், முகேஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்த தொழிலை நடத்தி வருகிறோம். நாங்கள் திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள். தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டோம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தொழில் செய்வதில் ஆர்வமாக இருந்தோம். தற்போது விடுமுறை காலம் என்பதால் அதை நடைமுறைப்படுத்த முடிவு செய்தோம். இதன்படி ரூ.ஒரு லட்சம் செலவு செய்து நண்பர்கள் உதவியுடன் இந்த தொழிலை தொடங்கி உள்ளோம். தொழில் தொடங்கி சில நாட்கள் தான் ஆகிறது. இருந்த போதிலும் மக்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள்.
பிளஸ்-2 தேர்ச்சி முடிவுகள் வந்ததும் நாங்கள் கல்லூரியில் சேர திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகும் இதை கைவிட மாட்டோம். தொடர்ந்து மாலை நேரங்களில் வியாபாரத்தை கவனிப்போம். எங்கள் பெற்றோருக்கு சுமை கொடுக்காமல் படிப்புக்குத் தேவையான பணத்தை இதன் மூலமே சம்பாதிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்காலில் கொரோனாவுக்கு முதல் பலியாக 60 வயது முதியவர் உயிரிழந்தார். நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
காரைக்கால்:
5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்குப் பின் காரைக்காலில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக இருந்தது.
இந்த நிலையில் காரைக்காலில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 90 பேருக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் நேற்று காலை தெரியவந்தது. இதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் காரைக்காலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 25 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறு சாலை சாமியார் குளத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த 4-ந் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தெரிவதற்குள், நேற்று முன்தினம் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு முதல் பலி பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 32 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி வரை 3,025 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. காரைக் கால் வயல்கரை வீதியை சேர்ந்த சுமார் 65 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், மாதா கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் பழகியதால், அவர் மூலம் 11 பேருக்கு தொற்று பரவி உள்ளது. அந்த 65 வயது நபரும், கடந்த சில தினங்களாக சளியுடன் சுற்றிவிட்டு, பிறகுதான் சிகிச்சைக்கு வந்தார். தொடக்கத்திலேயே சிகிச்சைக்கு வந்திருந்தால் இந்த 11 பேருக்கு தொற்று பரவியதை தடுத்திருக்கலாம்.
எனவே, யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், மாவட்ட மருத்துவ உதவி மையம் அல்லது அருகில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை உடனே தொடர்புகொள்ள வேண்டுகிறோம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்படி, தேவை இன்றி யாரும் வெளியில் வரவேண்டாம். மீறி வந்தால், கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.