என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,336 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 519 பேர் உயிரிழந்துள்ளனர்.   

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 238461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 132625  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9893 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 130261 பேருக்கும், டெல்லியில் 109140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,336ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 690 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
    Next Story
    ×