என் மலர்
புதுச்சேரி
அலட்சியமாக இருப்பவர்களை கொரோனா வைரஸ் விடாது என்று கவர்னர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:
சமூக வலைதளத்தில் புதுவை கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் மீறப்படுவதை அனைத்து வகையான ஊடகங்களும், அதிகாரிகளும் ஆவணப்படுத்த வேண்டும். சிலர் விதிமுறைகளை மீறி நடப்பதை பார்த்து மக்களும் அதை கடைபிடிக்கின்றனர்.
போலீசாரும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் எல்லா விஷயங்களிலும் மிகவும் ஆபத்தானது. அலட்சியமாக இருக்கும் எவரையும் அது விடாது.
இதில் சோகம் என்னவென்றால் அலட்சியமாக இருப்பவர்களால் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. குடும்பங்களில் சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களால்கூட இது பரவுகிறது.
கூட்டங்களுக்கு வர அழைப்பு விடுக்கும்போது மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்த கூட்டங்கள் மூலமாகவும் வைரஸ் பரவும். மெல்லிய முகக்கவசங்கள் அவர்களை முழுமையாக பாதுகாக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்துள்ளதாக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய உள்துறை செயலாளர், தேசிய நிர்வாகக் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் குழு அமைத்து இதனை கண்காணிக்கப்படும்.
தனியார் கோவில்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைப்பது, சிலைகளை வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து இருப்பதால் கோவில்களில் பிரசாதம் வழங்கவும் கூடாது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கலாசார நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. இவற்றுக்கு பொதுப்பணித்துறை, நகராட்சிகள், காவல்துறை, மாஜிஸ்திரேட்டுகள் எந்த ஒரு அனுமதியும் வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
வீடுகளில் ஏதாவது காரணத்தை கூறிவிட்டு வெளியே வரும் காதல் ஜோடிகள் பாரதி பூங்காவிற்குள் வந்ததும் சமூக இடைவெளி என்பதை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்கள். காற்றுபுகாதபடி கட்டிணைத்து நெருக்கமாக அமர்ந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி :
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுவையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் ஒரு தளர்வாக மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கவும் பாரதி பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாரதி பூங்காவுக்கு வருகின்றனர். ஆனால் அங்கு காதலர்கள் என்ற பெயரில் சிலர் நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.

தங்களை சுற்றி யார், யார் இருக்கிறார்கள்? நம்மை கவனிக்கிறார்களா? என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள். இவர்களது அட்டகாசத்தை யாராலும் சகிக்க முடியாது. பூங்காக்களில் சுற்றித் திரியும் காதல் ஜோடிகள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை என்பது இன்னும் உச்சகட்டம்.
இதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்வதில்லை. ரோட்டில் செல்பவர்களை மடக்கி அபராதம் விதிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இதேபோல் பூங்காக்களில் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களை பிடித்து அபராதம் விதித்தால் சமூகமாவது உருப்படும். அந்த பணியினை காவல்துறையினர் செய்தால் பொதுமக்களின் பாராட்டுகளை பெறலாம்.

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி:
புதுச்சேரி சமூக நலத்துறைஅமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் அமைச்சர் கந்தசாமி, மகன் விக்னேஷ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் ஜிப்மரில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலை சேர்ந்தவர். அவர், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். அவருக்குக் காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, ஜிப்மரில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியின் படத்தை வெளியிட்டு, கவர்னர் கிரண்பேடி அறிவுரை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை சட்டமன்ற கமிட்டி அறையில் சட்டத் தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தனபால், சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி பத்திரிகை செய்தி மற்றும் படத்தை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் முக்கிய பிரமுகர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். நான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளி உள்பட முக்கிய விதிமுறைகளை கடைபிடியுங்கள். அதை மீறும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
நீங்கள் புதுவையை விரும்பினால் இதை செய்யுங்கள். இந்த புகைப்படம் சமூக இடைவெளியை கடைபிடிக்காததற்கு சான்று. புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிறரின் இதுபோன்ற விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமூகத்துக்கு முன்னோடியாக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விதிகளை முதலில் கடைபிடிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளே தினசரி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதால் டாக்டர்களும், சட்டத்தை அமலாக்கம் செய்வோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் செய்ய வேண்டியதை அரசியல் தலைமையே செய்யாவிட்டால், கொரோனாவுக்கு எதிரான யுத்தம் பின்னோக்கிதான் செல்லும். இதனால் மக்கள்தான் கஷ்டப்படுவார்கள்.
அரசு துறையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்ள பயன்படுத்தப்படுகிறார்கள். கணிசமான நிதி ஆதாரமும் பரிசோதனை, சிகிச்சைக்கு செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு பொது பிரதிநிதியும் தங்கள் பகுதிகளுக்கு பொறுப்பேற்று தனிப்பட்ட ஒழுக்கத்தை கவனிக்கவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
விரைவில் விநாயகர் சதுர்த்தி விழா வரவுள்ளது, அரசியல் தலைமையில் உள்ளோர் தங்கள் பாணியை மாற்றிக்கொள்வதும் அவசியம். இல்லாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். அரசியல் தலைமையானது மக்களை சரியான வழியை நோக்கி வழிநடத்த வேண்டும். தவறான வழியை பின்பற்ற செய்யக் கூடாது. உண்மையில் புதுவையை நேசித்தால், மக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதியும் சமூக இடைவெளி, முககவசம் அணிதல், கையை தூய்மை செய்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை குறித்து குற்றச்சாட்டுகள் கூறிய நோயாளிகளை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் நேரில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுக்க முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சரியான வசதிகள் செய்யப்படவில்லை என்றும் கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளி நாகராஜ் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவற்றை உடனடியாக சரி செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கு இருந்த கழிவறை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. அமைச்சரின் இந்த செயலைப் பாராட்டி நாகராஜ் மீண்டும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சொகுசு படகுகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்த கவர்னர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு சென்றுவர படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் படகுகள் வாங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது சுமார் ரூ.2 கோடி செலவில் 2 சொகுசு படகுகள் வாங்கப்பட்டன. இந்தப் படகுகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன.
இந்த புகார்கள் தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்த கவர்னர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் மாணிக்க தீபன் மற்றும் டாக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறைகளை சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டது. அந்த பணிகளுக்காக கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமிக்க முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
முதலியார்பேட்டையில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார்பேட்டை தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). பெயிண்டர். இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவந்தார். சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது குடிக்க பாலமுருகன் பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு யோகேஸ்வரி தனது மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவியும், மகளும் பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த பாலமுருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி லாக்கரில் வைப்பதற்காக மூதாட்டி கொடுத்த 21 பவுன் நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் சுனாமி குடியிருப்பு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செங்கோல்மேரி (வயது 65). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகள் சிங்கப்பூரில் உள்ளார். மாதந்தோறும் செலவுக்கு அனுப்பும் பணத்தை சிறுக சிறுக சேமித்து 21 பவுன் நகைகளை மூதாட்டி சேர்த்து வைத்திருந்தார்.
வீட்டில் தனியாக இருப்பதால் நகைக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய மூதாட்டி, நகைகளை வங்கி லாக்கரில் வைக்க விரும்பினார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஏலச்சீட்டு நடத்தி வரும் சக்திவேல், அவருடைய மனைவி செல்லம்மாள் ராஜேஸ்வரியின் உதவியை நாடினார். அவர்கள் மூதாட்டியிடம் 21 பவுன் நகைகளை வாங்கிச்சென்று, வங்கி லாக்கரில் வைத்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், வங்கி லாக்கரில் உள்ள நகைகளை பார்க்க விரும்புவதாக மூதாட்டி செங்கோல்மேரி சக்திவேலிடம் தெரிவித்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் மூதாட்டியை வங்கிக்கு அழைத்துச்செல்லாமல், அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த செங்கோல்மேரி, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, சக்திவேல், அவரது மனைவி செல்லம்மாள் ராஜேஸ்வரி ஆகியோர் நகைகளை வங்கி லாக்கரில் வைக்காமல், அடமானம் வைத்து, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுபற்றி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் செங்கோல்மேரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல், செல்லம்மாள் ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள், கொரோனா பரிசோதனை செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவுக்கு பின் தம்பதி மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மூதாட்டியிடம் வங்கி லாக்கரில் நகைகளை வைப்பதாக கூறி, அடமானம் வைத்து மோசடியில் தம்பதி ஈடுபட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 264 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,382 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 21 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,382 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 3,201 பேர் குணமடைந்த நிலையில் கொரோனா தொற்றால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் 8 மையங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தினை தொடங்கிய ஆகஸ்டு 9-ந் தேதி அன்று (இன்று) இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுக்குமாறு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்து இருந்தன. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுவை மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், செல்வராசு, மாநில செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காமராஜர் சிலை, அண்ணாசிலை, சுதேசிமில், இந்திராகாந்தி சிலை, சேதராப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் ஆகிய 8 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
12 மணி நேர வேலை உத்தரவினை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கோவிட் வரியை ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.