என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் இன்று 264 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 264 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,382 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 21 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,382 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 3,201 பேர் குணமடைந்த நிலையில் கொரோனா தொற்றால்  இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×