search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுப்புறத்தை மறந்து காதல் ஜோடிகள் நெருக்கமாக இருந்ததை படத்தில் காணலாம்.
    X
    சுற்றுப்புறத்தை மறந்து காதல் ஜோடிகள் நெருக்கமாக இருந்ததை படத்தில் காணலாம்.

    பாரதி பூங்காவில் கொரோனா காலகட்டத்திலும் காதலர்கள் அட்டகாசம்

    வீடுகளில் ஏதாவது காரணத்தை கூறிவிட்டு வெளியே வரும் காதல் ஜோடிகள் பாரதி பூங்காவிற்குள் வந்ததும் சமூக இடைவெளி என்பதை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்கள். காற்றுபுகாதபடி கட்டிணைத்து நெருக்கமாக அமர்ந்து கொள்கின்றனர்.
    புதுச்சேரி :

    கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுவையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் ஒரு தளர்வாக மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கவும் பாரதி பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாரதி பூங்காவுக்கு வருகின்றனர். ஆனால் அங்கு காதலர்கள் என்ற பெயரில் சிலர் நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.

    வீடுகளில் ஏதாவது காரணத்தை கூறிவிட்டு வெளியே வரும் காதல் ஜோடிகள் பாரதி பூங்காவிற்குள் வந்ததும் சமூக இடைவெளி என்பதை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்கள். காற்றுபுகாதபடி கட்டிணைத்து நெருக்கமாக அமர்ந்து கொள்கின்றனர்.

    தங்களை சுற்றி யார், யார் இருக்கிறார்கள்? நம்மை கவனிக்கிறார்களா? என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள். இவர்களது அட்டகாசத்தை யாராலும் சகிக்க முடியாது. பூங்காக்களில் சுற்றித் திரியும் காதல் ஜோடிகள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை என்பது இன்னும் உச்சகட்டம்.

    இதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்வதில்லை. ரோட்டில் செல்பவர்களை மடக்கி அபராதம் விதிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இதேபோல் பூங்காக்களில் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களை பிடித்து அபராதம் விதித்தால் சமூகமாவது உருப்படும். அந்த பணியினை காவல்துறையினர் செய்தால் பொதுமக்களின் பாராட்டுகளை பெறலாம்.
    Next Story
    ×