என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 5 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்  உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டனர். 

    புதுவையில் அமைந்த தேசிய ஜனநாயக ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. 

    சாதி ரீதியிலான கணக் கெடுப்பு எடுக்காமல் எப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வார்டு ஒதுக்கீடு  செய்யப் பட்டது? என தி.மு.க. கோர்ட் டில் வழக்கு  தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. 2001 அட்டவணைப்படி புதிய தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம்  வெளியிட்டது. 

    இதற்கு தி.மு.க. இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்து தடை பெற்றது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்காத நிலையில், புதுவையில் மட்டும் இடஒதுக் கீடு கோரி தடை பெற்றது தி.மு.க.வின்  இரட்டை வேடத்தை காட்டுகிறது. 

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க. சதி செய்கிறது. தி.மு.க. தொடர்ந்த வழக்கு  நிலுவையில் இருக்கும்போதே தேர்தல் நடத்த கோருவது மக்களை ஏமாற்றும் செயல்.  

    தேர்தல் நடத்தக்கூடாது என்ற தி.மு.க.வின்   எண்ணத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் சரியான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்காமல் வலுசேர்த் துள்ளது கண்டிக்கத்தக்கது.  

    தி.மு.க.வின் இரட்டை வேடத்துக்கு தமிழக உள்ளாட்சி தேர்தலிலும், புதுவை உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பாடத்தை மக்கள்  புகட்டுவார்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயமடைந்தார்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே கூனிச் சம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது25). இவர் துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கி ளுக்கு பெட்ரோல் நிரப்ப திருக்கனூர்- திருவண்ணாமலை ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்குக்கு சென்றார். அப்போது அந்த வழியாக செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொருவர் ரமேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத் தில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ரமேசை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம்-மடுகரை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரங்க ராஜன் (வயது21). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    22&ந் தேதி காலை ரங்கராஜன் வேலைக்கு செல்ல மோட்டார் சைக்கி ளில் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். புதுவை&கடலூர் மெயின் ரோட்டில் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் கம்பெனி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ரங்கராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த ரங்கராஜன் வலது கை மற்றும் இடது காலில் காயமடைந்தார். அவர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கிரும்பாக்கம் போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் கல்வியை உயர்த்துவோம் என்ற கருத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள்  இணைந்து உறுதியேற்பு நிகழ்ச்சி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே  நடைபெற்றது.

    விழாவில் தன்னம்பிக்கை கலைக்குழு நிறுவனர்  எலிசபெத் ராணி   வரவேற்று பேசினார். அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி உறுதியேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

     இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரதட்சணை தடுப்பு ஆலோசனை வாரிய தலைவர்  டாக்டர் வித்யா ராம் குமார்     கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். புதுவை குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் திட்ட மேலாளர் சாலமன்  சவரி ராஜ், கலாம் விதைகளின்  விருட்சம் சமூக இயக்க நிறுவனர் ராஜா, புதுவை  மாநில  கோஜி ரியோ கராத்தேசங்க செயலாளர்  கராத்தே சுந்தர்ராஜன், சமூக செயல்பாட்டாளர் நிலா என்ற தெய்வானை, ஆறுமுகம் அறக்கட்டளை நிறுவனர்  தனலட்சுமி அங்கன்வாடி மைய ஆசிரியயை மேரி மற்றும்  தேவிபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி நடன மாணவிகள் பலரும் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் கல்வியை உயர்த்துவோம் என்று பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனர்.

     இதனை தொடர்ந்து புதுவை எதிரொலி தப்பாட்ட கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னம்பிக்கை கலைக்குழு நிறுவனர், உறுப்பினர்கள்  பிரசாந் மற்றும்  ரேவதி உள்ளிட்ட பலர்  செய்திருந்தனர்.
    குடியரசு தின விழாவையொட்டி இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.

    புதுவை  கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்கிறார். 

    இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில்  நடந்தது. 

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி  பங்கேற்பது, கவர்னரை வரவேற்பது, கவர்னர்  தேசியக்கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக்கொள்வது போன்ற  ஒத்திகைகள் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள்  இடம்பெறவில்லை. 

    நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தெலுங்கானாவின் கவர்னரான தமிழிசை முதன்  முதலாக தெலுங்கானா மற்றும் புதுவை என இரு மாநிலங்களில் ஒரே நாளில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். 

    இதற்காக தெலுங்கானா வில்  காலை 7 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி விட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுவைக்கு வரும் தமிழிசை காலை 9 மணிக்கு புதுவை   கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா இளைஞரணி சார்பில் சாமிபிள்ளை தோட்டத்தில் கோலப்போட்டி நடந்தது.
    புதுச்சேரி:


    கோலப் போட்டியில் காமராஜர் நகர் தொகுதி சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    இந்த போட்டியினை பா.ஜனதா இளைஞர் அணி துணைத் தலைவர் உமாசங்கர் தலைமையில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

    கோலப் போட்டியினை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பாஜனதா தலைவர் நாகேஸ்வரன், தொகுதி தலைவி தனலட்சுமி மற்றும் பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள், காமராஜர் தொகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கலர் டி.வி., 2-ம் பரிசாக ஏர்கூலர், 3-ம் பரிசாக 3 பர்னர் கியாஸ் ஸ்டவ் மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட உள்ளது.
    வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பகட்டத்தில் பெரிய நகரங்களில் இத்திட்டத்தை ஆயில் நிறுவனம் செயல்படுத்தியது. தொடர்ந்து தமிழகம், புதுவையில்  குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை எண்ணூரிலிருந்து புதுவை வழியாக நாகைப் பட்டினத்துக்கு 320 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது. 

    இதில் புதுவை மாநிலத்தில் 6 கி.மீ. தூரத்துக்கு கிளை எரியாயு குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புதுவை கிளை எரிவாயு இணைப்பு திட்டம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இ.மண்டகப்பட்டு- வழுதாவூர்,  துத்திப்பட்டு, கரசூர்,- கடப்பேரிகுப்பம்,- பூத்துறை வழியாக புதுவை மேட்டுப்பாளையத்துக்கு நுழைகிறது.  இங்கு எரிவாயு பகிர்மான முனையம் அமைக்கப்படுகிறது. 

    அங்கிருந்து புதுவை பகுதிக்கு குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    புதுவையில் குழாய் பதிக்கப்பட உள்ள அளவுக்கு ஏற்ப நில உரிமை யாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். இந்த இழப்பீடு தொகையை புதுவை வருவாய்த்துறை இப்போது நிர்ணயித்துள்ளது.

    இதன்படி கியாஸ் குழாய் பதிக்கப்பட உள்ள நிலத்தின் சொத்து வழிகாட்டி மதிப்பை 10 மடங்காக்கி அதில் 10 சதவீதம் நில பயனாளர் தொகையாக உரிமையாளர்களுக்கு வழங் கப்படும். மேலும் விவசாய சேதத்துக்கும் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    விவசாய பயிர்கள், பூக்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு சதுர மீட்டருக்கும், மர பயிர்களுக்கு ஆண்டு வளர்ச்சியை கணக்கில் கொண்டும் இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனை மரத்துக்கு மட்டும் உயரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    விவசாய பயிர்களை பொறுத்த வரை நெல்லுக்கு சதுரமீட்டருக்கு ரூ.84, சோளம் ரூ.73, தினை ரூ.84, கரும்பு ரூ.76, எண்ணெய் வித்து ரூ.108, பருத்திக்கு ரூ.66 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    தோட்டக்கலை பயிரில் வாழை சதுர மீட்டருக்கு ரூ.178, காய்கறி ரூ.190, மரவள்ளிக் கிழங்கு ரூ.189, மஞ்சள் ரூ.427, பூக்களில் ஜாதிமல்லி ரூ.135, குண்டுமல்லி ரூ.201, முல்லை ரூ.113, கனகாம்பரம் ரூ.26, சம்பங்கி ரூ.90, ரோஜா ரூ.250, காக்காட்டான் ரூ.100 இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இழப்பீட்டு தொகையை மாநில அரசின் உதவியுடன் கணக்கிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பின் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும்.
    கேரளா, தமிழகத்தை போல புதுவையிலும் கல்வி தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காரணமாக குழந்தைகளுக்கு 2 ஆண்டாக கற்றல்  இழப்பு  ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக ஊட்டச்சத்து குறை பாட்டுக்கும் ஆளாகி யுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் எந்த ஊடகம் வழியாக நடத்த வேண்டும். எத்தனை மணி நேரம் நடத்த வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவில்லை. பல மாணவர்கள் இணையதள வசதி இல்லாதவர்களாக உள்ளனர். 

    இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு மாணவர் கள் மீது அக்கறையில்லாத புதுவை அரசின் போக்கை உணர்த்துகிறது. இணையதள வசதியற்ற அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. 

    கேரளா, தமிழகத்தில் உள்ளது போல புதுவையில் கல்வி தொலைக்காட்சியை அரசு தொடங்க வேண்டும். பள்ளி மூடல்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பசியால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் விளையாட்டில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் முறையான சம்பளத்தை தர முன் வருவதில்லை. இதனால் அன்றாட தேவைக்கு முறையான வருமானம் இல்லாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் திருபுவனை பகுதியில் கிராமப்புற மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதி மாணவர்கள் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    கிரமப்பறங்களில்  உள்ள பெற்றோர்கள் தங்களது  அன்றாட தேவைக்காக அதிகாலையிலே கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். மாலையில் தான் அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.

    இதனால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் உணவு, உடை, பாதுகாப்பு தன்மையை இழந்து வருகிறார்கள். சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று பொழுது போக்கி வருகிறார்கள்.

    கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளிக்கு செல்லாமல், படிக்காமல் தேர்ச்சி  பெற்ற மாணவர்கள் கல்வி அறிவில் பின்தங்கி வருவது வேதனைக்குரிய செயலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சமூக வலைத்தளத்தில் புதுச்சேரி கவர்னர் பெயரில் போலியான தகவல் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும், வழிபாட்டு தலங்கள், ஊர்வலத்துக்கு தடை விதிப்பதாகவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரில் தகவல் பரவியது.

    இந்த உத்தரவை கண்டு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் அந்த உத்தரவு போலியானது என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது. மர்மநபர் சமூக வலைத்தளத்தில் போலியான தகவலை வெளியிட்டதாக மாவட்ட கலெக்டர் வல்லவன் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் உருவையாறு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் போலியான தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் 2-வது அலையின் போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட உத்தரவை திருத்தி மீண்டும் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    திருநள்ளாறில் சிறுவர்களுடன் சனீஸ்வரர் கோவில் யானை பிரக்ருதி விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    காரைக்கால் :

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக தற்போது கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.

    இந்த கோவிலில் 17 வயது பிரக்ருதி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இந்த யானை பொதுமக்களிடம் மிகவும் அன்பாக பழகக்கூடியது.

    கொரோனா காலம் என்பதால் காரைக்கால் நேதாஜி நகரை சேர்ந்த சகோதரர்களான யுவ பாரதி, நாராயணன் ஆகியோர் தினமும் கோவிலுக்கு வந்து யானையிடம் பழகி வந்துள்ளனர்.சிறுவர்களை பார்த்தால் போதும் யானை பிரக்ருதி குஷியாகி விடும். குளத்தில் மூழ்கி ஒளிந்து கொள்ளும், சிறுவர்கள் சத்தம் போட்டல் கரைக்கு வரும். பின்னர் சிறுவர்களுடன் யானை பிரக்ருதி விளையாடுகிறது.

    சிறுவர்கள் வீட்டுக்கு செல்லும் போது ஆசீர்வாதம் செய்து டாடா சொல்லி வழியனுப்பி வைக்கும். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிறுவர்களுடன் அன்பாக பழகும் யானையின் குணத்தை பார்த்து அனைவரும் அதிசயித்துள்ளனர்.
    புதுவை மக்களுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவசர, அவசியமான சிகிச்சைகளுக்கு மறுக்கப்படாது என கவர்னர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் பரிசோதனை செய்வதே இல்லை. பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக தொற்றால் பலியானோர்  எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 

    இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு  மட்டுமே சிகிச்சை தரப்படும் என்றும், மற்ற சிகிச்சைகளுக்கு தொலை மருத்துவ சேவை வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது.  ஜிப்மர்  மருத்துவமனைக்கு நாள்தோறும் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற வருவார்கள். 

    இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என புகார் எழுந்தது.  இதையடுத்து ஜிப்மர் இயக்குனர் மற்றும் அதிகாரிகளை  அழைத்து கவர்னர் தமிழிசை பேசினார். ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை சேவைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில்  நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள அவரின் சிலைக்கு கவர்னர் தமிழிசை  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா சூழலில் மக்கள் பாதுகாப்பாக  இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதை போலவே புதுவையிலும் தொற்று அதிகரித்திருக்கிறது. புதுவையில், மக்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு விடக்கூடாது என்பதற் காக தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் முழு அடைப்பு இருக்கிறது. 

    மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும்  என்பதற்காகதான் புதுவையில் தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

    மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும்  ஆறுதலான செய்தி. மேலும், இணைநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மரணம் ஏற்பட்டிருக்கிறது. 

    புதுவை மக்கள் பாதுகாப்பாக இருக்க  வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுவை அரசு எடுத்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன்.  ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள்  என்னை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்கள். 60 சதவீதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின்  எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை  என்றும் தெரிவித்தார்கள். 

    எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்பு அடையாத வகையில் மருத்துவ சேவையை தொடர வேண்டும்  என்று கேட்டுக்கொண்டேன். அவர்களும் உறுதி அளித்துள்ளனர். எனவே அவசர சிகிச்சையும், அவசியமான சிகிச்சையும் ஜிப்மர்  மருத்துவமனையிலும் மற்றும் புதுவையில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் மறுக்கப்படாது.  

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:


    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர் கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுவை தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து இருந்தது. 

    அந்த அறிவிப்பில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தி.மு.க. சென்னை  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

    இந்த வழக்கில் சென்னை  ஐகோர்ட்டும்  புதுவை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து  நடவடிக்கை களையும் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது.

    பிறகு அதை விசாரித்த சென்னை  ஐகோர்ட்டு முதல் அமர்வு இந்த வழக்கு சம்பந்தமான விவரங்கள் உச்சநீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு  அனுமதி அளித்தது. 

    மேலும் நிறுத்தி வைத்த தேர்தல் நடவடிக்கைகளை தொடர்பான தீர்ப்பினை  இருவாரம் நீட்டித்து  உத்தரவிட்டது. தி.மு.க. உச்சநீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. வில்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்த வழக்கில் வாதாடி ஒரு அருமையான தீர்ப்பை பெற்று தந்துள்ளார்.  அந்த தீர்ப்பில், ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்து அதன் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு அளித்து சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ள முறையை  மாநிலங்கள் பின்பற்றி  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அவ்வாறு வழங்கப்படும் முறையான இட  ஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டு மாநில தேர்தல் ஆணையர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    எனவே புதுவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்&
    பா.ஜனதா கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில்  கண்ணாமூச்சி விளையாட்டுகளை கைவிட்டு, இந்த தீர்ப்பை முறையாக கையாண்டு, தான் அமைத்துள்ள நீதிபதி தலைமையிலான  ஆணையத்திற்கு தேவையான அதிகாரங்களை அளித்து, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் இட  ஒதுக்கீடு  அளித்து விரைவில் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்திட வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×