என் மலர்
புதுச்சேரி
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி:
இந்திய குடியரசு தினம், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்நாள் ஆகும். புதுவை மக்களுக்கும், இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்முடைய தேசியத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச் சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப்பாதுகாக்கவும்- இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயக கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்க ளாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மதகடிப்பட்டு மாட்டு சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அங்காளன் எம்.எல்.ஏ. அறிவுரை கூறினார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம்.
இந்த மாட்டுச்சந்தையையொட்டி பல்வேறு கடைகள் அமைக்கப்படும். கடந்த சில மாதங்களாக கடைகள் அனைத்தும் விழுப்புரம் - புதுவை தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதனால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தன. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளை வரைமுறைப்படுத்தி சந்தை பகுதிக்கு உள்ளே கடையை வைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவாறு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வந்தன. இப்போது நடைபெற்ற வாரசந்தையிலும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளை வரைமுறை செய்யும் பணியில் ஈடுபட்ட னர்.
25-ந்தேதி நடைபெற்ற மாட்டுச்சந்தையில் அதிக அளவில் மாடுகள் விற்பனைக்கு வந்தன. சந்தை பகுதியில் மாடுகளை விற்பவர்களும், வாங்குபவர்களும் முககவசம் இன்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சந்தை பகுதிக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும் என்றும், முககவசம் அணியவேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சிறந்த அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் விருது வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் தேர்தல் துறை சார்பில் தேசிய வாக்காளர் தினம் கம்பன் கலையரங்கில் நடந்தது.
விழாவுக்கு தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமை வகித்தார். தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் முன்னிலை வகித்தார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் வரவேற்றார்.
விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் முதல் முறை வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டையை வழங்கினார். மேலும் பல்வேறு விருதுகளையும் வழங்கினார்.
சிறந்த வாக்காளர் பதிவு அதிகாரிக்கான விருது சத்தியமூர்த்தி, ஆதர்ஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை வாக்காளர் பதிவு அதிகாரி விருது பொய்யாத மூர்த்தி, ராஜ லட்சுமி ஆகியோருக்கும், சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர் விருது லட்சுமி, பிரபாகரன், சுமதி, லலிதா, விவேகானந்தன், கோபிநாதன், சக்திவேல், தேவகி ஆகியோருக்கும், தேர்தலில் தபால் வாக்குகளை நிர்வகித்தல் மற்றும் தேர்தல் நேர கொரோனா தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்ட துணை தேர்தல் அதிகாரி சவுரிரத்னகோஷ் கிஷோர், புதுவை பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் கோவிந்தசாமி, வேளாண்துறை துணை இயக்குனர் செழியன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.
சிறப்பாக செயலாற்றிய நலவழித்துறை, உள்ளாட்சி, தேசிய தகவல் நிறுவனம், கள விளம்பரத்துறையினருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.
சிறந்த தேர்தல் கல்வி ஒருங்கிணைப்பு அதிகாரி களுக்கான விருது பாரதிதாசன் அரசு கல்லூரி துணை பேராசிரியர் அருள்மேரி, இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி துணை பேராசிரியர் சதீஷ்குமார், கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி துணை பேராசிரியர் அருணாதேவி, வாணிதாசன் அரசு பள்ளி கலை ஆசிரியர் உமாபதி, அமலோற்பவம் பள்ளி ஆங்கில விரிவுரையாளர் இன்பராஜ், பேட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சுகுணா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் பரிசுகளை வழங்கினார். முடிவில் துணை தலைமை தேர்தல் அதிகாரி சவுரிரத்னகோஷ்கிஷோர் நன்றி கூறினார்.
உலகம் முழுவதும் கொரோனா 3-ம் அலை, ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சைதான் வழங்கப்பட்டு வருகிறது.
பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதாலும், பரிசோதனை கட்டணம் அதிகம் என்பதாலும், புதுவையில் ஒமைக்ரான் பரிசோதனை கடந்த சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இருப்பினும் மாநிலத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலில், ஒமைக்ரான் பாதித்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என தெரியவில்லை.
ஒமைக்ரானால் கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்றாலும், வைரஸ் எப்படிப்பட்ட தாக்கத்தை இனிமேல் ஏற்படுத்தும் என்பதை முழுமையாக கணிக்க முடியாது.
எனவே, உருமாறியுள்ள ஒமைக்ரான் குறித்து தொடர் ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது முக்கியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
புதுவையிலேயே ஒமைக்ரான் பரிசோதனை கூடம் அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக நவீன ஆய்வக கருவிகளை வாங்குவதற்கான டெண்டர் பணிகளை தொடங்கி உள்ளது.
புதுவையில் ஒமைக்ரான் ஆய்வகம் அமைக்க நாட்டின் முன்னணி ஆய்வக நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. டெண்டர் இறுதி செய்ததும், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் ஒமைக்ரான் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் உடனுக்குடன் பரிசோதனை முடிவுகள் சுகாதாரத்துறைக்கு கிடைக்கும். அத்துடன் எந்த மருத்துவ ஆய்வகத்தையும் சார்ந்திராமல், தினசரி பரிசோதனை எண் ணிக்கையை 8 ஆயிரம் வரை அதிகரிக்க முடியும்.
புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
புதுச்சேரி:
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும் எதிர்பாராத செலவு, வருவாய் குறைவு, திட்ட செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பட்ஜெட் மதிப்பீட்டுக்கும், துறைகளின் நடைமுறை செலவினத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்படும்.
இதை நிதியாண்டின் இறுதியில் அரசு திருத்தி நிதிநிலை சரி செய்யப்படும். புதுவையில், 2022-23-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய 2 மாதங்களே உள்ளது.
நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் எவ்வளவு செலவிடப்பட்டது? உபரி, பற்றாக்குறை எவ்வளவு உள்ளது? என விவரம் கோரி, அனைத்து துறைகளுக்கும் நிதித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், துறை ரீதியான வரவு-செலவு விபரத்தை வருகிற 28&ந் தேதிக்குள் ஆன்-லைனில் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவு களை நடைமுறைப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு, சமரசம் போன்ற உறுதியான செலவினங்களை ஒத்தி வைக்கக் கூடாது. நடப்பு நிதியாண்டுக்குள் 7&வது சம்பளக்குழு நிலுவைத் தொகையை வழ ங்குவதை துறைகள் உறுதி செய்ய வேண்டும்.
தவறினால் 7-வது சம்பளக்குழு நிலுவைத் தொகைக்காக 2022-23 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என உத்தரவிட்டுள்ளது. திருத்திய பட்ஜெட்டிற்கான பணிகளை அனைத்து அரசு துறைகளும் மேற்கொண்டுள்ளன.
இந்த மதிப்பீடு கிடைத்ததும், நிதி அதிகம் உள்ள துறைகளிடம் இருந்து, தேவைப்படும் பிற துறை திட்டங்களுக்கு நிதி பகிரப்பட உள்ளது.
புதுவை அரசு ஊழியர்களுக்கு 8 மாதங்களுக்கு ஊதியக்குழு பரிந்துரை தொகை வழங்கப்படாமல் உள்ளது. நிதித்துறை உத்தரவால் 8 மாத நிலுவைத்தொகை 6 ஆண்டுக்கு பிறகு கிடைப்பது உறுதியாகி உள்ளதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ரூ.150 கோடி வரை கூடுதல் செலவாகும்.
ஏனாம் மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்கக்கோரி சுகாதாரத்துறை செயலர் ஸ்ரீராமுலு மத்திய மருத்துவ கவுன்சில் குழு உறுப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை செயலர் ஸ்ரீராமுலு, மத்திய மருத்துவ கவுன்சில் குழு உறுப்பினர் செயலர் ஸ்ரீநிவாசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 44 மாணவர்கள் பெயர், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வுக்கு, புதுவை இடஒதுக்கீட்டு பட்டியலில் விடுபட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர்களின் பெயர்களை ஆய்வு செய்ததில், இவர்களது பெயர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில பட்டியலில் இல்லை. இவர்கள் புதுவை மாநிலத்தில் பிளஸ் -2 படித்து, நீட் தேர்வு எழுதியுள்ளனர். இருந்தும் இம்மாணவர்கள் பெயர், புதுவை இட ஒதுக்கீடு பட்டியலில் விடுப்பட்டுள்ளது.
எனவே, இவர்களை மத்திய மருத்துவ கவுன்சில் போர்டலில் புதுவை இட ஒதுக்கீடு பட்டியலில் இணைப்பதுடன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசபக்தி பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்தியத் தலைவராக 2 முறை பதவி வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அஹிம்சை வழியில் இந்திய விடுதலை போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை.
ஆயுதமேந்தினால் தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்று காங்கிரசை விட்டு விலகி, படை திரட்டி இந்திய விடுதலைக்காக, பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியவர் நேதாஜி.
இவரது தலைமையிலான இந்திய தேசிய ராணுவம், இந்தியாவுக்குள் வந்தபோது தன் தொண்டர்களை அனுப்பி நேதாஜியை எதிர்த்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். தேச துரோக தொண்டர்படை என்பது வரலாறு. இப்படிப்பட்ட தேச துரோக கும்பலின் வழிவந்த பா.ஜனதாவுக்கு, தேசபக்தியை பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.
சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலைக்காக போராடிய தலைவர்களே இல்லாததால் காங்கிரஸ் தலைவர்களான வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை முன்னிறுத்தி காந்தி, நேரு போன்ற தலைவர்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார்கள். மேலும் இந்திய சுதந்திர சரித்திரத்தை மாற்றி மத்திய பா.ஜனதாவினர் எழுத திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றுவதை ஏற்க முடியாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால் அவர் புதுச்சேரி மாநில முழு நேர கவர்னர் போல செயல்பட்டு வருகிறார்.
குடியரசு தினத்தன்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த அந்தமான் நிகோபார் தீவு கவர்னர் மத்திய உள்துறையின் அனுமதி பெற்று குடியரசு தினத்தன்று புதுச்சேரி முதல்-அமைச்சர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி பெற்றார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பரந்த மனதுடன் புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதனை கவர்னர் செய்ய தவறிவிட்டார்.
இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலத்தின் கவர்னர் 2 இடங்களில் தேசிய கொடியேற்றியதாக சம்பவம் நடைபெறவில்லை. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்று வதற்கு உரிமை உள்ளது.
அதே சமயத்தில் இரு மாநிலங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவப் பெயரை தரும்.
இதனை சுட்டிக் காட்ட காரணம் மத்திய அரசு புதுச்சேரிக்கு கவர்னரை நியமிக்காதது தான். கவர்னரை நியமித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த எந்த திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை என காரணம் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரியில் ஆளும் அரசு டம்மியாக செயல்படுகிறது. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு முதல்-அமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி ஆட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரத்தை தன் கையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் புதுச்சேரியை ஆள லாயக்கற்ற முதல்-அமைச்சர் என மக்கள் தீர்மானித்து விடுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதல்-அமைச்சர் எழுந்து புதுச்சேரி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால் அவர் புதுச்சேரி மாநில முழு நேர கவர்னர் போல செயல்பட்டு வருகிறார்.
குடியரசு தினத்தன்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த அந்தமான் நிகோபார் தீவு கவர்னர் மத்திய உள்துறையின் அனுமதி பெற்று குடியரசு தினத்தன்று புதுச்சேரி முதல்-அமைச்சர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி பெற்றார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பரந்த மனதுடன் புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதனை கவர்னர் செய்ய தவறிவிட்டார்.
இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலத்தின் கவர்னர் 2 இடங்களில் தேசிய கொடியேற்றியதாக சம்பவம் நடைபெறவில்லை. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்று வதற்கு உரிமை உள்ளது.
அதே சமயத்தில் இரு மாநிலங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவப் பெயரை தரும்.
இதனை சுட்டிக் காட்ட காரணம் மத்திய அரசு புதுச்சேரிக்கு கவர்னரை நியமிக்காதது தான். கவர்னரை நியமித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த எந்த திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை என காரணம் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரியில் ஆளும் அரசு டம்மியாக செயல்படுகிறது. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு முதல்-அமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி ஆட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரத்தை தன் கையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் புதுச்சேரியை ஆள லாயக்கற்ற முதல்-அமைச்சர் என மக்கள் தீர்மானித்து விடுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதல்-அமைச்சர் எழுந்து புதுச்சேரி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டசபை அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை செயலகம் மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊழியர்களின் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஊழியர்களிடம் பணிநேரத்தில் அலுவலகத்தில் இருக்கவும், பணிகள் தேக்கம் இல்லாமல் பணிபுரியவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சட்டசபை செயலர் முனுசாமி, சபாநாயகரின் தனி செயலர் தயாளன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சை மாணவி தற்கொலைக்கு தூண்டியவர்களை கைதுசெய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
டியவர்களை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக்கோரியும் இந்து முன்னணி சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சிவமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
கோட்ட செயலாளர் முருகையன்,அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ . ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சுரங்கப்பாதை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மீன்வளத்துறையை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகு மூலம் சுரங்கப்பாதை அருகில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
அப்பகுதியில் அவர்க ளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் இன்றி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு சுரங்கப்பாதை பகுதியில் மின்விளக்கு, தண்ணீர் வசதி, தார்சாலை வசதி, வலைக்கூடம் ஆகியவை அமைத்து தரக் கோரி அவர்கள் பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், கலங்கரை விளக்கம் உள்ள பகுதி வரையில் தான் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாகவும், அதற்கு மேல் உள்ள பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக கூறி அவற்றிற்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் அதிகாரம் புதுவை மாநில மீன் வளத்துறைக்கு இல்லை என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது அப்பகுதியில் பாண்டி மெரினா பீச் உருவாகியுள்ளது. அப் பகுதியில் மின்சார வசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டும் பலமுறை கேட்டும் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி வம்பா கீரப்பாளையம் மீனவ
பஞ்சாயத்தார் மற்றும் நடுத்தெரு மீனவ பஞ்சாயத்தார் இணைந்து மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அங்கு பணியில் இருந்த மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மின் விளக்கு, தண்ணீர் வசதி, தார்சாலை வசதி, வலைக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தெரிவித்திருந்தனர்.
மீன்வளத்துறை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் 23-ந் தேதி 2 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக ஆயிரத்து 130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 906, காரைக்காலில் 167, ஏனாமில் 40, மாகியில் 17 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 120, காரைக்காலில் 35, ஏனாமில் 12, மாகியில் 18 பேர் என 185 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 977, காரைக்காலில் 135, ஏனாமில் 9, மாகியில் 51 பேர் என ஆயிரத்து 172 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 783 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும் பியுள்ளனர்.
புதுவையில் 12 ஆயிரத்து 88, காரைக்காலில் 2 ஆயிரத்து 725, ஏனாமில் 523, மாகியில் 131 பேர் என 15 ஆயிரத்து 467 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 15 ஆயிரத்து 652 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 86 வயது முதியவர், காராமணிக்குப்பத்தை சேர்ந்த 61 ஆண் என 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 22 ஆயிரத்து 3 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






