search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள குழு நிலுவை தொகை

    புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
    புதுச்சேரி:

    பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும் எதிர்பாராத செலவு, வருவாய்  குறைவு, திட்ட செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பட்ஜெட் மதிப்பீட்டுக்கும், துறைகளின் நடைமுறை செலவினத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்படும். 

    இதை நிதியாண்டின் இறுதியில் அரசு திருத்தி நிதிநிலை சரி செய்யப்படும்.  புதுவையில், 2022-23-ம் நிதி  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய 2 மாதங்களே உள்ளது. 

    நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் எவ்வளவு செலவிடப்பட்டது? உபரி, பற்றாக்குறை எவ்வளவு உள்ளது? என விவரம் கோரி, அனைத்து துறைகளுக்கும் நிதித்துறை  சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

    அதில், துறை ரீதியான வரவு-செலவு விபரத்தை வருகிற 28&ந் தேதிக்குள் ஆன்-லைனில் அனுப்பி வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவு களை நடைமுறைப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். 

    நீதிமன்ற உத்தரவு, சமரசம்  போன்ற உறுதியான செலவினங்களை ஒத்தி வைக்கக் கூடாது. நடப்பு நிதியாண்டுக்குள் 7&வது சம்பளக்குழு நிலுவைத் தொகையை வழ ங்குவதை துறைகள் உறுதி செய்ய வேண்டும். 

    தவறினால் 7-வது சம்பளக்குழு நிலுவைத் தொகைக்காக 2022-23 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என உத்தரவிட்டுள்ளது. திருத்திய பட்ஜெட்டிற்கான பணிகளை அனைத்து அரசு துறைகளும் மேற்கொண்டுள்ளன. 

    இந்த  மதிப்பீடு கிடைத்ததும், நிதி அதிகம் உள்ள துறைகளிடம் இருந்து, தேவைப்படும் பிற துறை திட்டங்களுக்கு நிதி பகிரப்பட உள்ளது. 

    புதுவை அரசு ஊழியர்களுக்கு 8 மாதங்களுக்கு ஊதியக்குழு பரிந்துரை தொகை வழங்கப்படாமல் உள்ளது. நிதித்துறை உத்தரவால்  8 மாத  நிலுவைத்தொகை 6 ஆண்டுக்கு பிறகு கிடைப்பது உறுதியாகி உள்ளதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    மாநிலம் முழுவதும் 25  ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ரூ.150 கோடி வரை கூடுதல் செலவாகும்.
    Next Story
    ×