என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஏனாம் மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்கக்கோரி மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம்

    ஏனாம் மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்கக்கோரி சுகாதாரத்துறை செயலர் ஸ்ரீராமுலு மத்திய மருத்துவ கவுன்சில் குழு உறுப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை செயலர் ஸ்ரீராமுலு, மத்திய மருத்துவ கவுன்சில் குழு உறுப்பினர் செயலர் ஸ்ரீநிவாசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது:-

    புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 44 மாணவர்கள் பெயர், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வுக்கு, புதுவை  இடஒதுக்கீட்டு பட்டியலில் விடுபட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர். 

    இந்த மாணவர்களின் பெயர்களை ஆய்வு செய்ததில், இவர்களது  பெயர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில பட்டியலில் இல்லை. இவர்கள் புதுவை மாநிலத்தில் பிளஸ் -2 படித்து, நீட் தேர்வு  எழுதியுள்ளனர். இருந்தும் இம்மாணவர்கள் பெயர், புதுவை இட ஒதுக்கீடு பட்டியலில் விடுப்பட்டுள்ளது. 

    எனவே, இவர்களை மத்திய  மருத்துவ கவுன்சில் போர்டலில் புதுவை இட ஒதுக்கீடு பட்டியலில் இணைப்பதுடன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×