என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதகடிப்பட்டு வாரச்சந்தையில் குவிந்த வியாபாரிகளை படத்தில் காணலாம்.
    X
    மதகடிப்பட்டு வாரச்சந்தையில் குவிந்த வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    மதகடிப்பட்டு மாட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள்

    மதகடிப்பட்டு மாட்டு சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அங்காளன் எம்.எல்.ஏ. அறிவுரை கூறினார்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே  உள்ள மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம். 

    இந்த மாட்டுச்சந்தையையொட்டி பல்வேறு கடைகள் அமைக்கப்படும். கடந்த சில மாதங்களாக கடைகள் அனைத்தும் விழுப்புரம் - புதுவை  தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.  இதனால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தன. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வந்தது.  

    இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளை வரைமுறைப்படுத்தி சந்தை பகுதிக்கு உள்ளே கடையை வைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவாறு இடங்களை  அமைத்துக் கொடுத்தனர்.  இதனால்  போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வந்தன. இப்போது நடைபெற்ற வாரசந்தையிலும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளை வரைமுறை செய்யும் பணியில் ஈடுபட்ட னர்.

    25-ந்தேதி நடைபெற்ற மாட்டுச்சந்தையில் அதிக அளவில் மாடுகள் விற்பனைக்கு வந்தன. சந்தை பகுதியில் மாடுகளை விற்பவர்களும், வாங்குபவர்களும் முககவசம் இன்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருபுவனை தொகுதி  எம்.எல்.ஏ. அங்காளன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சந்தை பகுதிக்கு  விரைந்து வந்து பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும் என்றும்,  முககவசம் அணியவேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.  மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
    Next Story
    ×