search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் ஒமைக்ரான் பரிசோதனை ஆய்வகம்-கதிர்காமம் மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது

    உலகம் முழுவதும் கொரோனா 3-ம் அலை, ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு  அளிக்கப்படும் அதே சிகிச்சைதான் வழங்கப்பட்டு வருகிறது. 

    பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதாலும், பரிசோதனை  கட்டணம் அதிகம் என்பதாலும், புதுவையில் ஒமைக்ரான் பரிசோதனை கடந்த சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. 

    இருப்பினும் மாநிலத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலில், ஒமைக்ரான் பாதித்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என தெரியவில்லை. 

    ஒமைக்ரானால்  கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்றாலும், வைரஸ் எப்படிப்பட்ட தாக்கத்தை இனிமேல் ஏற்படுத்தும் என்பதை  முழுமையாக கணிக்க முடியாது. 

    எனவே, உருமாறியுள்ள ஒமைக்ரான் குறித்து தொடர் ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சை  அளிப்பது முக்கியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். 

    புதுவையிலேயே ஒமைக்ரான் பரிசோதனை கூடம் அமைக்க  சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக நவீன ஆய்வக கருவிகளை வாங்குவதற்கான டெண்டர் பணிகளை  தொடங்கி உள்ளது. 

    புதுவையில் ஒமைக்ரான் ஆய்வகம் அமைக்க நாட்டின் முன்னணி ஆய்வக நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. டெண்டர் இறுதி செய்ததும்,  கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் ஒமைக்ரான் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. 

    இதன் மூலம் உடனுக்குடன் பரிசோதனை முடிவுகள்  சுகாதாரத்துறைக்கு கிடைக்கும். அத்துடன் எந்த மருத்துவ ஆய்வகத்தையும் சார்ந்திராமல், தினசரி பரிசோதனை எண் ணிக்கையை 8 ஆயிரம்  வரை அதிகரிக்க முடியும்.
    Next Story
    ×