search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்.
    X
    மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்.

    மீன்வளத்துறையை மீனவர்கள் முற்றுகை

    சுரங்கப்பாதை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மீன்வளத்துறையை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப் பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகு மூலம் சுரங்கப்பாதை அருகில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். 

    அப்பகுதியில் அவர்க ளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் இன்றி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு சுரங்கப்பாதை பகுதியில் மின்விளக்கு, தண்ணீர் வசதி, தார்சாலை வசதி, வலைக்கூடம் ஆகியவை அமைத்து தரக் கோரி அவர்கள் பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆனால், கலங்கரை விளக்கம் உள்ள பகுதி வரையில் தான் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாகவும், அதற்கு மேல் உள்ள பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக கூறி அவற்றிற்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் அதிகாரம் புதுவை மாநில மீன் வளத்துறைக்கு இல்லை என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் தற்போது அப்பகுதியில் பாண்டி மெரினா பீச் உருவாகியுள்ளது. அப் பகுதியில் மின்சார வசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டும் பலமுறை கேட்டும் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி வம்பா கீரப்பாளையம் மீனவ 
    பஞ்சாயத்தார் மற்றும் நடுத்தெரு மீனவ பஞ்சாயத்தார் இணைந்து மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் அங்கு பணியில் இருந்த மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மின் விளக்கு, தண்ணீர் வசதி, தார்சாலை வசதி, வலைக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தெரிவித்திருந்தனர். 

    மீன்வளத்துறை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
    Next Story
    ×