என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்த காட்சி.
குடியரசு தின விழா இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின விழாவையொட்டி இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
புதுவை கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பது, கவர்னரை வரவேற்பது, கவர்னர் தேசியக்கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக்கொள்வது போன்ற ஒத்திகைகள் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை.
நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தெலுங்கானாவின் கவர்னரான தமிழிசை முதன் முதலாக தெலுங்கானா மற்றும் புதுவை என இரு மாநிலங்களில் ஒரே நாளில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்.
இதற்காக தெலுங்கானா வில் காலை 7 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி விட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுவைக்கு வரும் தமிழிசை காலை 9 மணிக்கு புதுவை கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






