search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது அ.தி.மு.க. குற்றச்சாட்டு

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 5 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்  உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டனர். 

    புதுவையில் அமைந்த தேசிய ஜனநாயக ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. 

    சாதி ரீதியிலான கணக் கெடுப்பு எடுக்காமல் எப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வார்டு ஒதுக்கீடு  செய்யப் பட்டது? என தி.மு.க. கோர்ட் டில் வழக்கு  தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. 2001 அட்டவணைப்படி புதிய தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம்  வெளியிட்டது. 

    இதற்கு தி.மு.க. இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்து தடை பெற்றது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்காத நிலையில், புதுவையில் மட்டும் இடஒதுக் கீடு கோரி தடை பெற்றது தி.மு.க.வின்  இரட்டை வேடத்தை காட்டுகிறது. 

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க. சதி செய்கிறது. தி.மு.க. தொடர்ந்த வழக்கு  நிலுவையில் இருக்கும்போதே தேர்தல் நடத்த கோருவது மக்களை ஏமாற்றும் செயல்.  

    தேர்தல் நடத்தக்கூடாது என்ற தி.மு.க.வின்   எண்ணத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் சரியான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்காமல் வலுசேர்த் துள்ளது கண்டிக்கத்தக்கது.  

    தி.மு.க.வின் இரட்டை வேடத்துக்கு தமிழக உள்ளாட்சி தேர்தலிலும், புதுவை உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பாடத்தை மக்கள்  புகட்டுவார்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×