search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : தி.மு.க. வலியுறுத்தல்

    இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:


    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர் கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுவை தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து இருந்தது. 

    அந்த அறிவிப்பில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தி.மு.க. சென்னை  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

    இந்த வழக்கில் சென்னை  ஐகோர்ட்டும்  புதுவை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து  நடவடிக்கை களையும் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது.

    பிறகு அதை விசாரித்த சென்னை  ஐகோர்ட்டு முதல் அமர்வு இந்த வழக்கு சம்பந்தமான விவரங்கள் உச்சநீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு  அனுமதி அளித்தது. 

    மேலும் நிறுத்தி வைத்த தேர்தல் நடவடிக்கைகளை தொடர்பான தீர்ப்பினை  இருவாரம் நீட்டித்து  உத்தரவிட்டது. தி.மு.க. உச்சநீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. வில்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்த வழக்கில் வாதாடி ஒரு அருமையான தீர்ப்பை பெற்று தந்துள்ளார்.  அந்த தீர்ப்பில், ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்து அதன் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு அளித்து சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ள முறையை  மாநிலங்கள் பின்பற்றி  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அவ்வாறு வழங்கப்படும் முறையான இட  ஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டு மாநில தேர்தல் ஆணையர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    எனவே புதுவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்&
    பா.ஜனதா கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில்  கண்ணாமூச்சி விளையாட்டுகளை கைவிட்டு, இந்த தீர்ப்பை முறையாக கையாண்டு, தான் அமைத்துள்ள நீதிபதி தலைமையிலான  ஆணையத்திற்கு தேவையான அதிகாரங்களை அளித்து, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் இட  ஒதுக்கீடு  அளித்து விரைவில் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்திட வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×