என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உறுதியேற்பு நிகழ்ச்சியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்த காட்சி.
    X
    உறுதியேற்பு நிகழ்ச்சியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்த காட்சி.

    பெண் குழந்தைகளை காப்போம் உறுதியேற்பு நிகழ்ச்சி அமைச்சர் சந்திரபிரியாங்கா தொடங்கி வைத்தார்

    தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் கல்வியை உயர்த்துவோம் என்ற கருத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள்  இணைந்து உறுதியேற்பு நிகழ்ச்சி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே  நடைபெற்றது.

    விழாவில் தன்னம்பிக்கை கலைக்குழு நிறுவனர்  எலிசபெத் ராணி   வரவேற்று பேசினார். அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி உறுதியேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

     இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரதட்சணை தடுப்பு ஆலோசனை வாரிய தலைவர்  டாக்டர் வித்யா ராம் குமார்     கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். புதுவை குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் திட்ட மேலாளர் சாலமன்  சவரி ராஜ், கலாம் விதைகளின்  விருட்சம் சமூக இயக்க நிறுவனர் ராஜா, புதுவை  மாநில  கோஜி ரியோ கராத்தேசங்க செயலாளர்  கராத்தே சுந்தர்ராஜன், சமூக செயல்பாட்டாளர் நிலா என்ற தெய்வானை, ஆறுமுகம் அறக்கட்டளை நிறுவனர்  தனலட்சுமி அங்கன்வாடி மைய ஆசிரியயை மேரி மற்றும்  தேவிபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி நடன மாணவிகள் பலரும் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் கல்வியை உயர்த்துவோம் என்று பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனர்.

     இதனை தொடர்ந்து புதுவை எதிரொலி தப்பாட்ட கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னம்பிக்கை கலைக்குழு நிறுவனர், உறுப்பினர்கள்  பிரசாந் மற்றும்  ரேவதி உள்ளிட்ட பலர்  செய்திருந்தனர்.
    Next Story
    ×