என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கரியமாணிக்கம் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம், கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த ராமு.இவரது மனைவி ஞானசுந்நரி (வயது 35).இவர் கரியமாணிக்கம் அடுத்த சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த மகாதேவன் மனைவி சுகன்யா (22), அஞ்சாபுலி மகள் ஷாலினி (22) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வேலை முடிந்து கரியமாணிக்கம் -மதகடிப்பட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால்  மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராத விதமாக நடந்து சென்ற ஞானசுந்தரி, சுகன்யா, ஷாலினி ஆகியோர் மீது மோதினார். 

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுல்தான்பேட்டையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு பள்ளி மாணவி திடீரென இறந்து போனார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை முகமதியார் நகரை சேர்ந்தவர் கவுஸ்பாஷா. இவர் சோபா கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சோபியாபேகம்(வயது15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக சோபியாபேகம் உடல்நிலை பாதிக்கபட்டிருந்தார். ஆனாலும் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்ததால் சோபியாபேகம் சரிவர மருந்து-மாத்திரை உட்கொள்வது இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சோபியாபேகம் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தனர். பின்னர் டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் சோபியாபேகத்தை ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சோபியாபேகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை கவுஸ்பாஷா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொகுதி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதியில் பல அடிப்படை பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.  குறிப்பாக பிராமினாள் வீதியில் ஆக்கிரமிப்பு, மரப்பாலம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, சாலைகளை பராமரித்தல், வாய்க்கால்கள் பராமரிப்பு, சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் சட்டம்&ஒழுங்கு பாதிப்புகள் ஆகியவை நீண்ட நாட்களாக தீர்வு காண முடியாமல் இருந்து வருகின்றது. 

    அரசின் பிற துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த பிரச்சினைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை களைய முதலியார் பேட்டை எம்.எல்.ஏ. சம்பத்  ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

    அதன்படி வருவாய் துறை, புதுவை நகராட்சி, பொதுப்பணித்துறை, காவல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் துணை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சம்பத் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில் துணை கலெக்டர் கந்தசாமி, தாசில்தார் குமரன், நகராட்சி ஆணையர் சிவகுமார் நகராட்சி, செயற் பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்க டாஜலபதி, பொதுப் பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை மத்திய கோட்ட செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர்  பார்த்தசாரதி, முதலியார்பேட்டை  போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, கிழக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் இடையே எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அறிவுரை தேவையில்லை என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடுநிலை தவறி கட்சி சார்புடன் செயல்படுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

    எம்.எல்.ஏ.க்களை அழைத்து கட்சிக்காக பேசுவது ஏற்புடையதல்ல என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, மத்திய பா.ஜனதா மந்திரியை வரவேற்றது ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

    இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மரபுகளை மீறாமல் செயல்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியதாவது:-

    நான் மரபுகளை மீறுவதாக கூறுவது தவறு.   நான் எந்த கொடி கட்டிய நிகழ்ச்சிகளுக்கும் சென்றதில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு சென்றேன். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சபாநாயகர்தான் கூட்ட வேண்டும். 

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்ட முடியாது. புதுவைக்கு வந்த பா.ஜனதா மத்திய மந்திரியை நான் தனியாக சந்திக்கவில்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கு வரும் தலைவரை வரவேற்பது தமிழர் மரபு.  இந்தியர்களின் கலாச் சாரம்.  அதை நாம் மறுக்கக் கூடாது. 

    தமிழக சபாநாயகர் தேர்தல் பணியை பார்த்தார். கருப்பு, சிகப்பு வேட்டி கட்டிக்கொண்டுதான் சட்டசபையில் அமர்ந்துள்ளார். அது சட்டசபை விதிமீறல் ஆகாதா? 

    சட்டசபை மரபுகளை மீறாமல் எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். சட்டவிதிகளை நான் படித்து தெரிந்துதான் சபாநாயகர் பதவியை ஏற்றேன். அதனால் எனக்கு பிறர் அறிவுரை செய்வதை நான் விரும்பவில்லை. அதில் தவறு இருந்தால் மாநில கவர்னரும், சுப்ரீம்கோர்ட்டும் கேட்கும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 881 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 20, காரைக்காலில் 4, ஏனாமில் 4, மாகியில் 2 பேர் புதிதாக     தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 69, காரைக் காலில் 44, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 121 பேர் சிகிச்சையில்  குணமடைந்தனர். 
    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 110 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 242, காரைக்காலில் 178, ஏனாமில் 30,  மாகியில் 18 பேர் என 468 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 495 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 65  ஆயிரத்து 288 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் தலைமையிலான குழு ஆய்வு நடந்தது.
    புதுச்சேரி:

    மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைந்து கண்காணிக்க மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் மறு ஆய்வுக்கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் நடந்தது. கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, துணைத்தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் தலைமை வகித்தனர். துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித்தலைவர் சிவா, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வைத்தியநாதன், கே.எஸ்.பி.ரமேஷ், சம்பத், செந்தில்குமார், ரிச்சர்ட், கலெக்டர் வல்லவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட தலைவர் ரவிபிரகாஷ் மற்றும் துறை தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர், எம்.எல்.ஏ.க்களின் கருத்துக் களை கேட்டறிந்தனர். தொடர்ந்து துறை வாரியாக மத்திய அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, நிலுவைத்தொகை குறித்தும், மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்கு கிடைத்த பலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    வீட்டில் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீ பிடித்து மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70).இவரது மனைவி அம்பிகா (65).இவர்களுக்கு 2 மகள்களும் அய்யப்பன் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.அய்யப்பன் கல்வித்துறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    வயது முதிர்வு காரணமாகவும்,உடல் நலக்குறைவாலும் குப்புசாமியும், அம்பிகாவும் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்தநிலையில் அம்பிகா சாமி கும்பிடுவதற்காக வீட்டில் விளக்கு ஏற்றினார்.அப்போது எதிர்பாராத விதமாக அம்பிகாவின் சேலையில் திடீரென தீ பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்பிகா சத்தம்போட்டு மயங்கி விழுந்தார். 

    சேலையில் சிறிதாக பற்றிய தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனையறிந்த அம்பிகாவின் மகன் அய்யப்பன் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அய்யப்பன் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    சாமி கும்பிடுவதற்காக விளக்கேற்றிய போது சேலையில் தீ பிடித்து மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கோட்டகுப்பத்தில் முதல் நகராட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் கோட்டக்குப்பம் நகராட்சியும் ஒன்று. பேரூராட்சியாக இருந்து சமீபத்தில் தான் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இந்த நகராட்சியில் முதல் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. 

    மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு, சுயேட்சை கள் என மொத்தம் 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    27 வார்டுகளில் ஒரு வார்டுக்கு மட்டும் 2 வாக்குச்சாவடிகளும் மற்ற வார்டுகளுக்கு ஒரு வாக்குசாவடி என மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் 5 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இன்று காலை 7 மணி முதல் 27 வார்டுகளிலும் விருவிருப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்காளர்கள் வந்து வாக்கு செலுத்த ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 

    மேலும் வாக்குச்சாவடிக்குள் வரும் வாக்காளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக முககவசம் அணிவதை அதிகாரிகள் உறுதி செய்து கொண்டு, வாக்காளர்கள் உள்ளே வரும்போதே உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் கிருமிநாசினிகள் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்பு வாக்காளர்களிடம் கையுரை வழங்கப்பட்ட பின்பே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 200&க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றார்கள்.
    அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலியானர்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி சமன்ஸ். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் மற்றும் அண்ணி இறந்து விட்டதால் அவர்களது மகன் சதீஷ்(27) என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார். சதீஷ் பிளம்பர் வேலை செய்து வந்தார். சரிவர வேலைக்கு செல்லாமல் அவர் மது குடித்து வந்தார். 

    இதையடுத்து மது பழக்கத்தை மறக்க சதீசை திருக்கோவிலூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து சமன்ஸ் சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் சதீஷ் அந்த மையத்தில் இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

    இந்தநிலையில் மேரி உழவர்கரையில் உள்ள ஒரு மதுகடைக்கு சதீஷ் மது குடிக்க சென்றார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுக்கடை அருகிலேயே சதீஷ் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது வளர்ப்பு தாய் சமன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார். அப்போது சதீஷ் இறந்து போனது தெரியவந்தது.

    இதுகுறித்து சமன்ஸ் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு, வம்பாபேட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவரது  மனைவி தமிழரசி (வயது 31). 

    அய்யனாரப்பன் குவைத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தமிழரசி தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை மெயின்ரோட்டில் உள்ள தேசிய வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.. வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து வந்து வண்டி பெட்டியில் வைத்தார்.

    பிறகு கிருமாம்பாக்கத்தில் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள நகை அடகு கடையில் தான் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணம் ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மீதி 50 ஆயிரத்தை வண்டி பெட்டியில் வைத்து மூடிவிட்டு நகை அடகு கடைக்கு சென்றார்.

    அங்கு  நகையை மீட்டுக்கொண்டு பின்னர் வண்டி பெட்டியை திறந்து பார்த்த போது அதில்  இருந்த ரூ. 50 ஆயிரம் மாயமானதை கண்டு தமிழிரசி அதிர்ச்சியடைந்தார்.  மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  உடைத்து திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. 

    அதனைத் தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தமிழரசி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    மசாஜ் சென்டரில் சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் வங்கி ஊழியர், என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் மசாஜ் சென்டர், அழகுநிலையம் என்ற பெயரில் விபசாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக போலீசார் மசாஜ் சென்டர், அழகுநிலையங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் சிறுமியை விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் மீதமுள்ள 24 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்தநிலையில் முதலியார்பேட்டையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜ்குமார் (வயது 27), மூலக்குளத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுரேஷ் (34) ஆகிய 2 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுவையில் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியர்களின் சம்பள பணத்தை மனைவி கணக்கில் செலுத்தி மோசடி செய்த அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளூர் சாலையில் பிரபல தனியார் செல்போன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவிமேலாளராக பாக்க முடையான் பட்டை சேர்ந்த ராஜ்குமார்பணி புரிந்து வந்தார்.

    இந்த அலுவலகத்தில் 5 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 2 ஊழியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஆனால், கடந்த ஓராண்டாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    இதற்கிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களுக்கு தற்போது புதிதாக சேர்க்கப்பட்டதாக பணி ஆணை வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு புதிதாக பணி ஆணை வழங்கியதில் அலுவலக மானேஜர் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து விசாரித்த போது, கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களுக்கு வழங்காமல் உதவி மேலாளர் ராஜ்குமார் தனது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ. 2 லட்சம் சம்பள தொகையை ராஜ்குமார் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவன மேலாளர் கார்த்திகேயன் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×