என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு
கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு, வம்பாபேட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவரது மனைவி தமிழரசி (வயது 31).
அய்யனாரப்பன் குவைத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தமிழரசி தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை மெயின்ரோட்டில் உள்ள தேசிய வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.. வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து வந்து வண்டி பெட்டியில் வைத்தார்.
பிறகு கிருமாம்பாக்கத்தில் அரசு பள்ளிக்கு அருகில் உள்ள நகை அடகு கடையில் தான் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணம் ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மீதி 50 ஆயிரத்தை வண்டி பெட்டியில் வைத்து மூடிவிட்டு நகை அடகு கடைக்கு சென்றார்.
அங்கு நகையை மீட்டுக்கொண்டு பின்னர் வண்டி பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ. 50 ஆயிரம் மாயமானதை கண்டு தமிழிரசி அதிர்ச்சியடைந்தார். மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தமிழரசி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story






