என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.
அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை
தொகுதி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதியில் பல அடிப்படை பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. குறிப்பாக பிராமினாள் வீதியில் ஆக்கிரமிப்பு, மரப்பாலம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, சாலைகளை பராமரித்தல், வாய்க்கால்கள் பராமரிப்பு, சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் சட்டம்&ஒழுங்கு பாதிப்புகள் ஆகியவை நீண்ட நாட்களாக தீர்வு காண முடியாமல் இருந்து வருகின்றது.
அரசின் பிற துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த பிரச்சினைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை களைய முதலியார் பேட்டை எம்.எல்.ஏ. சம்பத் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.
அதன்படி வருவாய் துறை, புதுவை நகராட்சி, பொதுப்பணித்துறை, காவல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் துணை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சம்பத் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணை கலெக்டர் கந்தசாமி, தாசில்தார் குமரன், நகராட்சி ஆணையர் சிவகுமார் நகராட்சி, செயற் பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்க டாஜலபதி, பொதுப் பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை மத்திய கோட்ட செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, கிழக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் இடையே எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
Next Story






