என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஒட்டம்பாளையம் அரசு தொடக்க பள்ளி கோவில் நிலத்திலேயே தொடர்ந்து செயல்படும் என எதிர்கட்சி தலைவர் சிவா உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர்  பாப்பாஞ்சாவடி ஒட்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி அஅமைந்துள்ள நிலம்   ஏழை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது. 

    கோவில் அறங்காவலர் குழுவினர் பள்ளியை காலி செய்யும்படி ஆசிரியர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் அப்பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் முறையிட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்.சிவா பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:-

    55 ஆண்டுகாலமாக இந்த பள்ளி இந்த இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து இங்கேயே பள்ளி செயல்படவும், காலியாக உள்ள இடத்தில் விளையாட்டுத்திடல் அமைத்துத்தரவும், தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

    கோவிலுக்கு நிதியுதவி வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித்துறை மூலம் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

     கூட்டத்தில் கல்வித்துறை துணை ஆய்வாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்குப்பம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்றார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு வன விலங்கு பாதுகாப்பு மற்றும் வனத்துறை சார்பில் மணவெளி தொகுதி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆமை முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொரித்து அந்த ஆமை குஞ்சுகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் புதுக்குப்பம் கடலில் விட்டனர். 

    இந்த நிகழ்ச்சியில் வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி, துணை இயக்குனர் குமரவேல், பிரபாகரன், வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், கிருஷ்ண சாமி,  தணிகைவேல் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகம், ரமேஷ், அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    திருபுவனை அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே கலித்தீர்த் தாள்குப்பம்-திருக்கனூர் ரோட்டில் செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ் புக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது 2 பேர் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி முடிவுகளை செல்போனில் தெரிவித்துக்கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.

    அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அய்யூர் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு (வயது39) விழுப்புரம் சித்தேரி கரையை சேர்ந்த ராஜா(42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    கும்பகோணத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது51). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து புதுவை நகர பகுதியில் கடைகளில் கூலி வேலை செய்து இரவு நேரங்களில் நேரு வீதியில் உள்ள பிளாட்பார கடைகளில் தூங்குவது வழக்கம்.

    இவரிடம் அவ்வப்போது கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த கருணா என்ற வாலிபர் மது குடிக்க பணம் கேட்பார். பால்ராஜும் அவருக்கு பணம் கொடுத்து வந்தார்.

    சம்பவத்தன்று பால்ராஜ் நேரு வீதியில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கருணா மது குடிக்க பால்ராஜிடம் பணம் கேட்டார். அதற்கு பால்ராஜ் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கருணா தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கருங்கலை எடுத்து பால்ராஜை தாக்கினார்.

    மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று பால்ராஜை மிரட்டி விட்டு கருணா தப்பி சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் கண்ணில் பலத்த காயமடைந்த பால்ராஜை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பால்ராஜ் பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாவை தேடி வருகிறார்கள்.
    சென்டாக் நிர்வாகம் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக அளவு இடங்களை அளித்து 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் விதி மீறல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கவர்னர், முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாணவர்களின் நலன் கருதி அரசும், சுகாதாரத்துறை செயலகமும் 2017-ம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க புதுச்சேரி மாநில சிறுபான்மை பிரிவு ஒதுக்கீட்டில் சேர மாணவர்கள் இல்லை என்றால் அதை நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு மாற்றி புதுச்சேரி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆனால் சென்டாக் நிர்வாகம் இதை பின்பற்றாமல் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக அளவு இடங்களை அளித்து 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆகவே சென்டாக் நிர்வாகம் தவறாக நடத்திய 2-ம்கட்ட கலந்தாய்வின் மாணவர் சேர்க்கை ஆணையை ரத்து செய்து சுகாதாரத்துறை செயலகத்தின் உத்தரவு மற்றும் அரசாணையை பின்பற்றி புதிதாக 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி மருத்துவ சேர்க்கை ஆணையை வழங்கவேண்டும்.

    மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வு குறித்து காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நலன்கருதி நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகும். இதனால் இதுவரை நேர்மையாக கலந்தாய்வு நடத்திய சென்டாக் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பள்ளிகள் கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள், கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    கொரோனா 3வது அலை தாக்கத்தால் அந்த வகுப்புகள் நடைபெறவில்லை.  இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் நாளை
    (திங்கட்கிழமை) முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும்,  பள்ளிகளில் முறையான ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 148 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி உள்ளார்.
    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் லாரி திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    காரைக்கால்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான லாரியை, அதே ஊரைச்சேர்ந்த ஜான் பாண்டியன் என்பவர், ஓட்டிவந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், மீன் ஏற்றுவதற்காக கடந்த 7-ந் தேதி நிறுத்தியிருந்தார்.

    மீன் ஏற்றுவதற்கு காலதாமதம் ஆனதால், லாரியை துறைமுகத்திலேயே நிறுத்திவிட்டு, அருகில் உள்ள நாகை மாவட்ட லாரி அலுவலகத்திற்கு ஜான்பாண்டியன் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, லாரி திருட்டு போய் இருப்பது கண்டு ஜான்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

    பல இடங்களில் தேடியும் லாரி கிடைக்காததால், லாரி திருட்டு போனது குறித்து, நிரவி காவல் நிலையத்தில் ஜான்பாண்டியன் புகார் கொடுத்தார். அதன்பேரில், நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,553 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    புதுச்சேரி:

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் புதுவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

     மக்கள் நீதி மன்றத்தை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியும் புதுவை சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.  
    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் நீதிமன்றம் மூலம் பல நன்மைகள், நல்ல  தீர்வுகள் கிடைக்கும். அரசு அதிகாரி ஒருவர் பதவி  உயர்வுக்காக நீதிமன்றம் சென்றால் வாய்தா வாங்கி கொண்டு இருக்கும். ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் உடனே தீர்வு  காணும் அதிகாரம் உள்ளது. மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை. வழக்குகளை திரும்ப பெற்று கொள்ள முடியும். 
    பாகபிரிவினை  வழக்கு, கணவன்--மனைவி பிரச்சினை என எந்த வழக்கிற்கும் தீர்வு கிடைக்கும். 

    மற்ற நீதிமன்றத்தில் கட்டிய தொகையை திரும்ப பெற  முடியாது. ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற முடியும். இரு தரப்புக்கும் தோல்வி இல்லை. 

    இவ்வாறு அவர்  பேசினார். 

    புதுவையில் 10, காரைக்காலில் 4, மாகியில் 2, ஏனாமில் ஒரு அமர்வு என 17 அமர்வுகளில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ளவை, நேரடி வழக்கு என 3 ஆயிரத்து 553 வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. 

    நிகழ்ச்சியில்  புதுவை தலைமை நீதிபதி செல்வ நாதன், சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் நீதிபதி சோபனா தேவி, வக்கீல்கள் சங்க தலைவர்  குமரன், சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    மழலையர் வகுப்புகளுக்கு 148 ஆசிரியர்கள் நியமனம் செய்ய ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வந்தது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தனியார் பள்ளிகளில்தான் முன்மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் அங்கு மாணவர்களை சேர்க்கும் பெற்றோர் தொடர்ச்சியாக அதே பள்ளியிலேயே படிக்க வைக்கின்றனர். 

    அரசு பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகளை தொடங்கினால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. சில ஆண்டுக்கு முன்பு அரசின் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகளை தொடங்கினர். 

    நகர்ப்புறத்தில் அதிகளவிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பள்ளிகளிலும் முன்மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதற்கு தனியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக பெரும்பாலான அரசு பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. 

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகள் பராமரிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். 148 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கொரோனா பரவல் தொடங்கியதால் பள்ளிகள் மூடப்பட்டது. அடுத்து சட்டமன்ற தேர்தலும் வந்தது. இதனால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் இப்போது கொரோனா பரவல் குறைந்ததால் வருகிற 14-ந் தேதி அரசு பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகள் தொடங்க உள்ளது.  இதையொட்டி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 148 ஆசிரியர்களுக்கு 12-ந்தேதி (சனிக்கிழமை) பணி ஆணை வழங்கப்படுகிறது. மாலை கல்வித்துறை வளாகத்தில் நடக்கும் விழாவுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். உடனடியாக இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு, 14-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர்.
    குயவர்பாளையம் லெனின் வீதியில் சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு தி.மு.க. செயலாளர் நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட குயவர் பாளையம் லெனின்வீதி, நகரின் முக்கிய பிரதான சாலையாகும். இந்த சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாக உள்ளது.

    இதனால் இந்த ரோட்டில் பயணம் செய்யும் பெண்கள், வயதானவர்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி பல விபத்துக்கள் நேரிடுகிறது. அதனால் இந்த சாலையை உடனடியாக போட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளருக்கு கடிதம் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தியதின் அடிப்படையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பூஜை போடப்பட்டது. 

    ஆனால் இதுநாள் வரையில் அந்த சாலை போடவில்லை. இந்த  விவகாரத்தில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது சரியில்லை.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களின் நலன் கலதி இந்த சாலை போடாவிட்டால்  பொதுமக்களை ஒன்று திரட்டி புதுவை பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு கண்டன முற்றுகை போராட்டத்தை நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    வண்ண அருவி கலைக்கூடத்தில் காகித சிற்ப கண்காட்சி ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை செயின்ட் தெரசா வீதியில் உள்ள வண்ண அருவி கலைக்கூடத்தில் ஓவியர் கிருஷ்ணன் உருவாக் கிய காகித சிற்ப கண்காட்சி  தொடக்கவிழா நடந்தது.

    ஓவியர் ஆனந்தராஜ் வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கண் காட்சியை திறந்து வைத்து சிற்பங்களை பார்வையிட்டார். 

    கோவை லலித்  கலா ஷேத்ரா கல்லூரி இயக்குனர் ரவிராஜ் வாழ்த்தி பேசினார். புதிய தூரிகைகள் நிறுவனர் ஓவியர் அன்பழகன், கோவை  நுண்கலை கல்லூரி துணை பேராசிரியர் விக்னேஷ்ராஜ் வாழ்த்துரை வழங்கினர். 

    ஓவியர் கந்தப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  ஓவியர் கிருஷ்ணன் நன்றி கூறினார். 

    கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட காகித சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. குப்பைக்கு செல்லும் வீணான  காகிதங்களை கொண்டு புதுமையான அழகிய சிற்பங்களை கிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்.

    பள்ளி, கல்லூரி, பொதுநல அமைப்பினர், பெண்கள், திருநங்கைகளுக்கும் இக்கலையை இலவசமாக கற்றுத்தருகிறார். இவரது ஓவியங்கள் கலெக்டர் அலுவலகம், கல்வித்துறை,  நலவழித்துறை, கவர்னர் மாளிகை என பல இடங்களில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    திட்டக்குழுவை கூட்டி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     அடுத்த நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான எந்த வெளிப்படையான நடவடிக்கையையும் அரசு இதுவரை எடுக்கவில்லை.

    பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு கூட்டப்பட வேண்டிய திட்டக்குழுவின் மறு ஆய்வுக்கூட்டம்  இதுவரை கூட்டப்படவில்லை. அதே சமயம் பெரும்பாலான அரசுத்துறைகளில் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைகளில் 40 சதவீதம் கூட செலவு செய்யப்படவில்லை என தெரி கிறது. 

    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தால் புதுவையின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். மேலும் திட்டங்கள் நிறை வேற்றப்படுவது தாமதம் ஆகும். 

    எனவே 2022--2023-ம் நிதியாண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முறையாகவும், விரைந்தும் எடுக்க வேண்டும். 

    மத்தியில் மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசின் கூட்டணி அரசுதான் ஆட்சியில் உள்ளது. 

    எனவே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் பேசி புதுவைக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை தீவிரமாக எடுக்க வேண்டும்.

    அதுபோல் மாநில திட்டக்குழுவின் கூட்டத்தை கூட்டி 2021-2022 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், எதனால் முழு தொகையும் செலவு செய்யப்படாமல் உள்ளது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

    மேலும்,மாநில திட்டக் குழுவின் கூட்டத்தை கூட்டி துறை அதிகாரிகளுடன் விவாதித்து பட்ஜெட் தொகை குறித்த முடிவு எடுத்து விரைவில் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    ×