என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் லாரி திருடிய மர்ம நபர்

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் லாரி திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    காரைக்கால்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான லாரியை, அதே ஊரைச்சேர்ந்த ஜான் பாண்டியன் என்பவர், ஓட்டிவந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், மீன் ஏற்றுவதற்காக கடந்த 7-ந் தேதி நிறுத்தியிருந்தார்.

    மீன் ஏற்றுவதற்கு காலதாமதம் ஆனதால், லாரியை துறைமுகத்திலேயே நிறுத்திவிட்டு, அருகில் உள்ள நாகை மாவட்ட லாரி அலுவலகத்திற்கு ஜான்பாண்டியன் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, லாரி திருட்டு போய் இருப்பது கண்டு ஜான்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

    பல இடங்களில் தேடியும் லாரி கிடைக்காததால், லாரி திருட்டு போனது குறித்து, நிரவி காவல் நிலையத்தில் ஜான்பாண்டியன் புகார் கொடுத்தார். அதன்பேரில், நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×