என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் சிவா கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த காட்சி.
    X
    ஒட்டம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் சிவா கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த காட்சி.

    அரசு தொடக்க பள்ளி கோவில் நிலத்திலேயே தொடர்ந்து செயல்படும்- சிவா எம்.எல்.ஏ. உறுதி

    ஒட்டம்பாளையம் அரசு தொடக்க பள்ளி கோவில் நிலத்திலேயே தொடர்ந்து செயல்படும் என எதிர்கட்சி தலைவர் சிவா உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர்  பாப்பாஞ்சாவடி ஒட்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி அஅமைந்துள்ள நிலம்   ஏழை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது. 

    கோவில் அறங்காவலர் குழுவினர் பள்ளியை காலி செய்யும்படி ஆசிரியர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் அப்பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் முறையிட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்.சிவா பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:-

    55 ஆண்டுகாலமாக இந்த பள்ளி இந்த இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து இங்கேயே பள்ளி செயல்படவும், காலியாக உள்ள இடத்தில் விளையாட்டுத்திடல் அமைத்துத்தரவும், தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

    கோவிலுக்கு நிதியுதவி வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித்துறை மூலம் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

     கூட்டத்தில் கல்வித்துறை துணை ஆய்வாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×