search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுவை அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கு 148 ஆசிரியர்கள் நியமனம்

    மழலையர் வகுப்புகளுக்கு 148 ஆசிரியர்கள் நியமனம் செய்ய ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வந்தது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தனியார் பள்ளிகளில்தான் முன்மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் அங்கு மாணவர்களை சேர்க்கும் பெற்றோர் தொடர்ச்சியாக அதே பள்ளியிலேயே படிக்க வைக்கின்றனர். 

    அரசு பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகளை தொடங்கினால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. சில ஆண்டுக்கு முன்பு அரசின் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகளை தொடங்கினர். 

    நகர்ப்புறத்தில் அதிகளவிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பள்ளிகளிலும் முன்மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதற்கு தனியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக பெரும்பாலான அரசு பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. 

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகள் பராமரிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். 148 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கொரோனா பரவல் தொடங்கியதால் பள்ளிகள் மூடப்பட்டது. அடுத்து சட்டமன்ற தேர்தலும் வந்தது. இதனால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் இப்போது கொரோனா பரவல் குறைந்ததால் வருகிற 14-ந் தேதி அரசு பள்ளிகளில் முன்மழலையர் வகுப்புகள் தொடங்க உள்ளது.  இதையொட்டி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 148 ஆசிரியர்களுக்கு 12-ந்தேதி (சனிக்கிழமை) பணி ஆணை வழங்கப்படுகிறது. மாலை கல்வித்துறை வளாகத்தில் நடக்கும் விழாவுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். உடனடியாக இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு, 14-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர்.
    Next Story
    ×