என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்ற காட்சி.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3553 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,553 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி:
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் புதுவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மக்கள் நீதி மன்றத்தை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியும் புதுவை சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் நீதிமன்றம் மூலம் பல நன்மைகள், நல்ல தீர்வுகள் கிடைக்கும். அரசு அதிகாரி ஒருவர் பதவி உயர்வுக்காக நீதிமன்றம் சென்றால் வாய்தா வாங்கி கொண்டு இருக்கும். ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் உடனே தீர்வு காணும் அதிகாரம் உள்ளது. மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை. வழக்குகளை திரும்ப பெற்று கொள்ள முடியும்.
பாகபிரிவினை வழக்கு, கணவன்--மனைவி பிரச்சினை என எந்த வழக்கிற்கும் தீர்வு கிடைக்கும்.
மற்ற நீதிமன்றத்தில் கட்டிய தொகையை திரும்ப பெற முடியாது. ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற முடியும். இரு தரப்புக்கும் தோல்வி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுவையில் 10, காரைக்காலில் 4, மாகியில் 2, ஏனாமில் ஒரு அமர்வு என 17 அமர்வுகளில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளவை, நேரடி வழக்கு என 3 ஆயிரத்து 553 வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி செல்வ நாதன், சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் நீதிபதி சோபனா தேவி, வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






