என் மலர்
புதுச்சேரி
கூட்ட தொடரின் தொடர்ச்சி என்பதால் சட்ட சபையில் கவர்னர் உரை இடம் பெறாது என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சட்டப்பேரவை 2-வது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கூடி அன்றைய தினமே மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந் தேதி மீண்டும் சட்டமன்றம் கூட்டப்பட இருக்கிறது அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
மேலும், கூடுதல் செலவீனங்களுக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்று ஒப்புதல் பெறப்படும். அரசின் திட்டங்களை செயல் படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகர் என்ற முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது.
கூட்ட தொடரின் தொடர்ச்சி என்பதால் கவர்னர் உரை இடம் பெறாது. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கவர்னர் உரை இடம் பெறும். அனைத்து மாநிலங்களின்
சட்ட மன்றத்தை பார்வையிட்டு புதிய வடிவமைப்பில் புதுவை சட்டமன்றம் கட்டப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.
ஊழியர்கள் போராட்டத்தால் நகராட்சி பூங்காக்களில் செடிகள் வாடும் நிலையில் உள்ளது.
புதுச்சேரி:-
புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அரசே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும்.
நிலுவையிலுள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் இறப்பு-பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி, துப்புரவு பணி, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பராமரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை, சட்டமன்றம் அருகில் உள்ள பாரதி பூங்கா 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. தினமும் இரு வேளையும் பூங்காவில் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். இதனால் பச்சைப்பசேல் என பூங்கா செழித்து காணப்படும். ஊழியர்களின் போராட்டத்தால் தண்ணீர் ஊற்றப்படவில்லை. புதுவையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.
100 டிகிரிக்கும் மேல் கொளுத்தும் வெயிலால் மக்கள் மதியநேரங்களில் வீடுகளுக்கும் முடங்கிப் போயுள்ளனர். இந்த சூழலில் தண்ணீர் இல்லாமல் பாரதி பூங்கா உட்பட நகராட்சி பூங்காக்கள் அனைத்திலும் மரம், செடிகள், புல்தரைகள் காய்ந்து சருகாகி வருகின்றன.
பாரதி பூங்காவை சுற்றியுள்ள அம்பேத்கர் சிலை, வ.உ.சி. சிலை, அன்னை தெரேசா சிலை ஆகிய சதுக்கங்களும் பராமரிப் பின்றி களையிழந்துள்ளன. பாரதி பூங்காவில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் பெற்றோர்கள் அழைத்து வந்து உணவு கொடுப்பர்.
ஊழியர்களின் போராட்டத்தால் பாரதி பூங்கா பூட்டப்பட்டதால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.42 கோடியில் புறநகர் பஸ்நிலையம் அமைக்கப்படும் என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ்நிலைய த்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என நேரு எம்.எல்.ஏ. ஏற்கனவே புகார் செய்திருந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பஸ்நிலையத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
புதிய பஸ்நிலையத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் வல்லவன், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண் ஆகியோரை அழைத் திருந்தார். இதையேற்று கலெக்டர் வல்லவன், செயல் அதிகாரி அருண் ஆகியோர் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.
நேரு எம்.எல்.ஏ. அவர்களை அழைத்துச் சென்று ஒவ்வொரு பகுதியாக காண்பித்தார். மின்அறை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவறை, கடைகள், பஸ் நிறுத்துமிடம் ஆகியவற்றை சுற்றிக்காட்டினார்.
சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. மின் அறையில் கதவே இல்லாமல் வயர்கள் வெளிப்படையாக உள்ளதை சுட்டிக்காட்டி சீரமைத்து தரும்படி கோரினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுத்தகட்டமாக புதிய பஸ்நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. என அருண் தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:&
புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என எம்.எல்.ஏ. நேரு புகார் கூறியிருந்தார். பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதி, குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா வசதி, வாகன நிறுத்துமிடத்தில் கட்டண வசூலை முறைப்படுத்துவது உட்பட பல விஷயங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளோடு ஆய்வு செய்தோம். உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக் கப்படும். சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பழுதாகியுள்ளவற்றை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள இருக்கைகள் பழுது நீக்கப்பட்டு, புதுப்பிக்கப் பட்டு நிறுவப்படும். கழிவறைகள் சுத்தமாக உள்ளன. இன்னும் அதிக கவனம் செலுத்தி பெருநகரங்களுக்கு இணையாக, விமான நிலையத்தில் உள்ளதுபோல கழிப்பறையை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள முடியும் என ஆய்வு செய்து தரவுகள் தயாரிக்கப்பட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே காலியிடத்தில் புதிதாக புற நகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். முதல்-அமைச்சர் ஒப்புதலோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.42 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை அருகே சாய்பாபா சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் காட்டுத்தீபோல் பரவியதையடுத்து அங்கு பக்தர்கள் குவிந்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்த இரும்பை புறவழி சாலையில் லாஸ்பேட்டையை சேர்ந்த சந்துரு என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு இடம் வாங்கி அதில் சிறு கொட்டகை அமைத்து சித்தர் சீரடி சாய்பாபா கோவிலை கட்டினார்.
கடந்த ஆண்டு இக்கோவிலில் குருபூஜை விழா விமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சித்தர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
தற்போது அந்த இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கோவில் கட்டிடம் கட்டி மே மாதம் 8-ந் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. அதற்காக ஜெய்ப்பூரில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் 2 டன் சித்தர் சாய்பாபா சிலை கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டு கோவில் வளாகத்தில் மரத்திலான அட்டைப்பெட்டியில் மூடி வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோவிலில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாய்குமார் என்பவர் தங்கி பூஜைகள் செய்து பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவர் எழுந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சித்தர் சாய்பாபா சிலை தலை துண்டிக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சாய்குமார் கோவில் உரிமையாளர் சந்துரு, கோவில் நிர்வாக செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே கோவிலுக்கு வந்த சந்துரு எரிக்கப்பட்டிருந்த சாய்பாபா சிலையை பார்த்து துயரம் தாளாமல் கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து அவர் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ கோவில் அறையில் இருந்த கடப்பாரையை எடுத்து பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா சிலையை உடைத்து சேதப்படுத்தி அதனை தீவைத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் காட்டு தீபோல் பரவியதையடுத்து அங்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஆரோவில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் இலவச அரிசியில் புழு, பூச்சி இருப்பதாக வையாபுரிமணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனா பரவல் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிகப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரிசி, தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த அரிசி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மூலம் புதுவையில் பள்ளிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலத்தோடு இந்த அரிசியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரிசியில் வண்டு, புழு, பூச்சிகள் உருவாகிவிட்டன.
புதுவை முத்தியால்பேட்டையில் பொதுமக்களுக்கு வண்டு, புழு, பூச்சிகளோடு அரிசி விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரிசியில் வண்டு, புழு, பூச்சிகளை கண்டு பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இந்த அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், நோய் தாக்குதலுக்கும்தான் ஆளாக வேண்டியிருக்கும்.
மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும். புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் காலதாமதமின்றி வண்டு, புழு, பூச்சிகளோடு உள்ள அரிசியை உடனடியாக மாற்றித்தர வேண்டும். இருப்பு வைத்துள்ள அரிசி களையும் பரிசோதனை செய்து தரமான அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டை தொகுதியில் சுத்தமான குடிநீர் கேட்டு பெண்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது-
புதுச்சேரி:
உலக தண்ணீர் தினமான புதுவை முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கேட்டு சட்டசபை நோக்கி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
சோலை நகர் இளைஞர் விடுதி அருகே தொடங்கிய நடை பயணத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சரவணன், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெண்கள் பலர் தண்ணீர் குடங்களோடு நடைபயணமாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அங்கு முத்தியால்பேட்டை தொகுதியில் சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம், சோலைநகர் வழியாக இயங்கிய பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். முத்தியால் பேட்டையில் அனைத்து சாலையிலும் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மடுகரை அரசு பள்ளியில் மர்மநபர்கள் கதவை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ஆண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
வழக்கம் போல், பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளியின் உட்புற கேட்டை உடைக்க முயற்சி செய்து உள்ளனர்.
மேலும் அங்கிருந்த ஜாடிகளை சேதப்படுத்தி யுள்ளனர். பூட்டை உடைக்கும் முயற்சி தோல்வியுற்றதால் அங்கிருந்து சென்று விட்டனர்.
பணிக்கு வந்த ஊழியர்கள் கேட் சேதப்பட்டிருப்பதை அறிந்து, பள்ளி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் இதுகுறித்து மடுகரை புறக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பள்ளியில் எந்தப் பொருளும் திருடபடவில்லை என்பதை உறுதி செய்தனர்.
அந்த கட்டிட வளாகத்தில் நூலகம் ஆய்வகம் மற்றும் கணினி அறை உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. மர்ம நபர்கள் திருடும் முயற்சியோடு, ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. அமைப்பாளர் சிவாவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜ.க.வினர் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ரிச்சர்ட், சீனிவாச அசோக், பா.ஜ.க. பொதுச்செயலாளர் மோகன் குமார், துணைத்தலைவர் விக்ரமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
அப்போது காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு கேளிக்கை வரியை நீக்கக்கோரி பா.ஜ.க.வினர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
இதன்பின் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு கேளிக்கை வரியை நீக்க ஆவண செய்வதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரின் பூர்வகுடி மக்களான பண்டிட் சமூகத்தினர் அனுபவித்த கஷ்டங்கள், பிற மாநிலங்களுக்கு செல்லும் நிஜ நிகழ்வுகளை படமாக எடுத்துள்ளனர்.
திரைப்படம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா தவறான கருத்தை தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
உருளையன் பேட்டை சங்கோதியம்மன் நகரில் நீர் திருவிழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
இவ்விழாவில் கவுண்டன் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ஊர் பெரியோர்களும், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து நீர் குடத்தை ஏந்தி மறைமலையடிகள் சாலை வழியாக செங்குந்தர் வீதி, சங்கோதி அம்மன் நகரில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு நேரு எம்.எல்.ஏ. நீ குடத்தை பெற்று அப்பகுதி மக்களிடம் நீர் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இந்த விழாவுக்கு புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியூ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் தலைமை தாங்கினார். நீர் குடம் வீதி வீதியாக வரும்போது அப்பகுதியில் மேளதாளம், சிலம்பம், ஒயிலாட்டம் நடத்தி வரவேற்றனர். குளங்கள் காப்போம் குழு தலைவர் கார்த்திகேயன், தினேஷ், சூர்யா குழுவினர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சங்கோதி அம்மன் நகரை சேர்ந்த மணவாளன், அய்யனார் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்க உறுப்பினர்கள் செல்வம், பாக்கியராஜ், செழியன், அமிர்தலிங்கம், கந்தசாமி, அருணாச்சலம், அலாவுதீன், பிரபஞ்சன், சூசை, சுரேஷ்,இஸ்மாயில் அப்துல்பாபு, பாலு, வீரா, ராகுல், மற்றும் பலர் செய்திருந்தனர்.
75-வது சுதந்திர தினத்தையொட்டி தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் பாதயாத்திரையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையிலும் சுதந்திர திருநாளை கொண்டாடும் வகையிலும் கல்லூரி மாணவ-மாணவியர்களின் பாதயாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பாதயாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கல்லூரி வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் அமைக்கப்பட்டிருந்த சமூக காட்டின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் சோதனை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புதுச்சேரி பாரதி பூங்கா அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒன்றான சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதற்கு உறுப்பினராக விரும்புவோர் மாத கட்டணமாக ரூ.249-ம், 3 மாத கட்டணமாக ரூ.499-ம் செலுத்த வேண்டும். இதற்கு இலவசமாக சைக்கிள் ஓட்ட முடியும். மேலும் உறுப்பினர்களுக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.5-ம், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரூ.10-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் சைக்கிள் வாடகை விடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுவையில் முக்கியமான சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 44 இடங்களில் சைக்கிள் நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டவுடன் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஸ்மார்ட் சிட்டி அதிகாரி தெரிவித்தார்.
இதுபற்றி அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. புதுவையில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு சைக்கிள் வாடகை திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

ரூ.1அரை கோடி செலவில் கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை சார்பில் 75 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனம், கன்று தீவனம் வழங்கும் திட்ட தொடக்க விழா சண்முகாபுரத்தில் நடந்தது.
கால்நடைத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். துறை இயக்குனர் செல்வராஜ் வரவேற்றார். கால்நடை, கன்று தீவனத்தை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திட்டம் குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியதாவது:-
கடந்த காலத்தில் கால்நடை, கன்று தீவனம் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 2 மாதத்துக்கு கால்நடை, கன்று தீவனம் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதில் ரூ.127.87 லட்சம் மதிப்பில் 615 டன் கால்நடை தீவனம் 4 ஆயிரத்து 100 கால்நடைகளுக்கும் ரூ.22.03 லட்சம் மதிப்பில் 104.40 டன் கன்று தீவனம் 696 கன்றுகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.