என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் பாதயாத்திரையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் வைத்தியநாதன் எம
அரசு கல்லூரி மாணவர்கள் பாதயாத்திரை
75-வது சுதந்திர தினத்தையொட்டி தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் பாதயாத்திரையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையிலும் சுதந்திர திருநாளை கொண்டாடும் வகையிலும் கல்லூரி மாணவ-மாணவியர்களின் பாதயாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பாதயாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கல்லூரி வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் அமைக்கப்பட்டிருந்த சமூக காட்டின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






