என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுத்தமான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்.
    X
    சுத்தமான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்.

    சுத்தமான குடிநீர் கேட்டு பெண்கள் நடைபயணம்

    முத்தியால்பேட்டை தொகுதியில் சுத்தமான குடிநீர் கேட்டு பெண்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது-
    புதுச்சேரி:

    உலக தண்ணீர் தினமான   புதுவை முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கேட்டு சட்டசபை நோக்கி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.

    சோலை நகர் இளைஞர் விடுதி அருகே தொடங்கிய நடை பயணத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சரவணன், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் பெண்கள் பலர் தண்ணீர் குடங்களோடு நடைபயணமாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    இதையடுத்து அங்கு முத்தியால்பேட்டை தொகுதியில் சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம், சோலைநகர் வழியாக இயங்கிய பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். 

    மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். முத்தியால் பேட்டையில் அனைத்து சாலையிலும் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    Next Story
    ×