என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய தீவனம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் கால்நடை வளர்ப்போருக
    X
    மானிய தீவனம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் கால்நடை வளர்ப்போருக

    கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனம்

    ரூ.1அரை கோடி செலவில் கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

    புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை சார்பில் 75 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனம், கன்று தீவனம் வழங்கும் திட்ட தொடக்க விழா சண்முகாபுரத்தில் நடந்தது.

    கால்நடைத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். துறை இயக்குனர் செல்வராஜ் வரவேற்றார். கால்நடை, கன்று தீவனத்தை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி  வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். 

    திட்டம் குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியதாவது:-

     கடந்த காலத்தில் கால்நடை, கன்று தீவனம் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 2 மாதத்துக்கு கால்நடை, கன்று தீவனம் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 

    இதில் ரூ.127.87 லட்சம் மதிப்பில் 615 டன் கால்நடை தீவனம் 4 ஆயிரத்து 100 கால்நடைகளுக்கும் ரூ.22.03 லட்சம் மதிப்பில் 104.40 டன் கன்று தீவனம் 696 கன்றுகளுக்கு வழங்கப்பட உள்ளது. 
    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×