என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்மநபர்களால் உடைக்கப்பட்ட பள்ளி கேட்டை படத்தில் காணலாம்.
    X
    மர்மநபர்களால் உடைக்கப்பட்ட பள்ளி கேட்டை படத்தில் காணலாம்.

    அரசு பள்ளி கதவை உடைத்து திருட முயற்சி

    மடுகரை அரசு பள்ளியில் மர்மநபர்கள் கதவை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம்  அருகே மடுகரை ஆண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    வழக்கம் போல், பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளியின் உட்புற கேட்டை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். 

    மேலும் அங்கிருந்த  ஜாடிகளை சேதப்படுத்தி யுள்ளனர். பூட்டை உடைக்கும் முயற்சி தோல்வியுற்றதால் அங்கிருந்து  சென்று விட்டனர். 

    பணிக்கு வந்த ஊழியர்கள் கேட் சேதப்பட்டிருப்பதை அறிந்து, பள்ளி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் இதுகுறித்து மடுகரை புறக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பள்ளியில் எந்தப் பொருளும் திருடபடவில்லை என்பதை உறுதி செய்தனர். 

    அந்த கட்டிட வளாகத்தில் நூலகம் ஆய்வகம் மற்றும் கணினி அறை உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. மர்ம நபர்கள் திருடும் முயற்சியோடு, ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×