என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி விலக்கு கேட்டு ரங்கசாமியை பா.ஜ.க.வினர் சந்தித்து வலியுறுத்தினர்.
தி.மு.க.வுக்கு பா.ஜனதா கண்டனம்
காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. அமைப்பாளர் சிவாவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜ.க.வினர் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ரிச்சர்ட், சீனிவாச அசோக், பா.ஜ.க. பொதுச்செயலாளர் மோகன் குமார், துணைத்தலைவர் விக்ரமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
அப்போது காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு கேளிக்கை வரியை நீக்கக்கோரி பா.ஜ.க.வினர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
இதன்பின் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு கேளிக்கை வரியை நீக்க ஆவண செய்வதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரின் பூர்வகுடி மக்களான பண்டிட் சமூகத்தினர் அனுபவித்த கஷ்டங்கள், பிற மாநிலங்களுக்கு செல்லும் நிஜ நிகழ்வுகளை படமாக எடுத்துள்ளனர்.
திரைப்படம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா தவறான கருத்தை தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






